Published : 23 Apr 2017 09:26 AM
Last Updated : 23 Apr 2017 09:26 AM
செல்போன் செயலி வழியாக மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி அடுத்த 2 மாதங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது.
சென்னையில் இரு வழித்தடங் களில் மொத்தம் 45 கி.மீ தூரத் துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலையங்களில் எஸ்க லேட்டர், லிஃப்ட் வசதி மற்றும் மெட்ரோ ரயிலில் ஏசி வசதி உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
தற்போது, விமான நிலையம் - ஆலந்தூர் கோயம்பேடு, பரங்கிமலை கோயம்பேடு வரையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சுமார் 12 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மெட்ரோ ரயில் இயக்க வழித்தட விவரம், மெட்ரோ ரயில்கள் வருகை - புறப்பாடு நேரம், டிக்கெட் கட்டணம், டிக்கெட் எடுப்பது, பயணிகள் புகார் அளிப்பது, டிக்கெட் ரீசார்ஜ் செய்து கொள்வது உள்ளிட்ட வசதிகளை பயணிகள் பெறும் வகையில் ஒருங்கிணைந்த ‘ஆன்ராய்டு செல்போன் செயலி’ (ஆஃப்) வசதி விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:
மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை படிப் படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 14-ம் தேதியில் ஒரே நாளில் 19 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் குளு, குளுவென மெட்ரோ ஏசி ரயில்களில் பயணம் செய்யத் தொடங்கி விட்டனர். இதனால், பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த எண்ணிக்கை 10 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்.
இந்நிலையில், மெட்ரோ ரயில் வழித்தடங்கள், டிக்கெட் எடுப்பது, பயணம் நேரம், அருகில் உள்ள பேருந்து நிலையம், பயணம் நேரம், பாதுகாப்பு உதவி எண்கள், மாதந்தோறும் ரீசார்ஜ் செய்வது, பார்க்கிங் கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட வசதிகளை பெறும் வகையில் ஆன்ட்ராய்டு ‘செல்போன் செயலி’ வடிவமைக்கப்பட்டு முன்னோட்ட பணிகள் நடைபெற்று வரு கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT