Published : 06 Aug 2016 08:13 AM
Last Updated : 06 Aug 2016 08:13 AM
செல்போன், செயின் பறிப்பு, வழிப்பறி குற்றவாளிகளை கைது செய்ய காவல் மாவட்டத்துக்கு ஒரு தனிப்படை விதம் சென்னை யில் 12 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன.
சென்னையில் கடந்த சில தினங்களாக கொள்ளையர்களின் கைவரிசை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு மட்டும் பீர்க்கங்கரணை, குன்றத்தூர், வளசரவாக்கம் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பெண் களிடம் செயின்கள் பறிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து கொள்ளை யர்களை கைது செய்ய போலீஸார் வியூகம் அமைத்துள்ளனர். சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் தலா ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையில், ஒரு உதவி ஆணையர், ஒரு இன்ஸ்பெக்டர் சுழற்சி முறையில் பணி செய்து வருவார்கள். சீருடை அணியாமல் சாதாரண உடையணிந்த (மப்டி) போலீஸாரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகரிக்க காரணம் என்ன?
வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்கும் குற்றப் பிரிவில் குறைவான எண்ணிக் கையிலேயே போலீஸார் உள்ள னர். இதனால் அனைத்து பகுதி களிலும் முழுமையாக 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல் பட முடிவதில்லை. இது கொள்ளை யர்களுக்கு வசதியாகிவிடுகிறது. மேலும், குற்றப்பிரிவுக்கு நியமிக் கப்பட்டுள்ள போலீஸாருக்கு வேறு பணி வழங்கப்படுவதால் இவர்களின் நேரம் விரயமாகிறது.
குற்றங்களை குறைப்பது எப்படி?
அதிகாலை, நள்ளிரவு மற்றும் மதிய நேரங்களில் பெரும்பாலும் கொள்ளை, வழிப்பறி நடக்கிறது. இந்த நேரத்தில் போலீஸார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், முக்கியமான பகுதிகளில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை நிறுவி அதை கட்டுப்பாட்டு அறை அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.
நெடுஞ்சாலைகள், சினிமா தியேட்டரில் இரவு காட்சி முடியும் நேரத்தில் மேலும் ரோந்து பணியை முடுக்கி விட வேண்டும். ஏனென்றால் இரவு காட்சி சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பும் ரசிகர்கள் போர்வையில் சில கொள்ளையர்கள் பொது மக்களோடு ஊடுருவி கைவரிசை காட்டுகின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்து செயின் பறிக்கும் குற்றவாளிகள் பெரும்பாலும் திருடப்பட்ட வாகனங்களிலேயே வருகின்றனர். இவர்களை அடையாளம் காண இரவு வாகன சோதனையை முடுக்கி விட வேண்டும்.
பின்னடைவு ஏன்?
தற்போது வழிப்பறி சம்பவங் களில் புதிய நபர்கள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். காதலிக்காக நகை பறிப்பது, ஆடம்பர செலவுக் காக செயின் பறிப்பது, ஆடம் பர வாழ்க்கைக்காக கொள்ளை யடிப்பது என புதியவர்களின் பட்டியல் நீள்கிறது. ஏற்கெனவே குற்றவாளிகள் பட்டியலில் இல்லாத இவர்களை அடையாளம் காண்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்படுகிறது.
குற்றங்களை தடுப்பது குறித்து போலீஸ் கூடுதல் காவல் ஆணையர் சங்கர் கூறும்போது, “செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடு பவர்களை கைது செய்ய காவல் மாவட்டத்துக்கு ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள். இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் சிறார்களும் சில நேரங்களில் ஈடுபடுகின்றனர். இவர்களையும் பிடிக்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT