Published : 01 Dec 2014 08:41 AM
Last Updated : 01 Dec 2014 08:41 AM

தனியாரிடம் இருந்து ரூ.16,280 கோடிக்கு மின்சாரம் கொள்முதல்: அதிக விலைக்கு வாங்குவதால் மின் வாரியத்துக்கு இழப்பு

கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.22 ஆயிரம் கோடிக்கு தமிழக அரசு மின்சாரத்தை விலைக்கு வாங்கியுள்ளது. இதில் தனியாரிடம் இருந்து மட்டும் ரூ.16,280 கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியத்துக்கு தினமும் சராசரியாக 12,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. சுமார் 4,500 மெகாவாட் மின்சாரம் தமிழக அனல், நீர் மற்றும் எரிவாயு மின் நிலையங்களில் இருந்து கிடைக்கிறது. மேலும் மத்திய அரசின் மின் நிலையங்கள் மூலம் சுமார் 3,500 மெகாவாட், தமிழக அரசின் காற்றாலைகள் மூலம் 17 மெகாவாட், தனியார் காற்றாலைகள் மூலம் 3,400 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது.

பற்றாக்குறைக்கு தனியார் அனல் மின் நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்சார கூட்டு நிலையங்கள் மற்றும் சுயதேவைக்கான தனியார் மின் நிலையங்களில் இருந்து, மின்சாரம் விலைக்கு வாங்கப்படுகிறது. வெளிமாநில மின் வணிக நிறுவனங்கள் மற்றும் அண்டை மாநில மின் நிறுவனங்களிலும் மின்சாரத்தை விலைக்கு வாங்கி, தட்டுப்பாடு சமாளிக்கப்படுகிறது.

இந்த அடிப்படையில், தமிழக மின் வாரியம் பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் குறுகிய மற்றும் நீண்டகால ஒப்பந்தம் போட்டு, மின்சாரத்தை வாங்குகிறது. கடந்த 2013 ஏப்ரல் முதல் 2014 மார்ச் வரை சுமார் 22 ஆயிரத்து 90 கோடி ரூபாய்க்கு மத்திய மின் நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு...

இதில், குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களிடம் கடந்த பல ஆண்டுகளாக யூனிட் ஒன்றுக்கு ரூ.14-க்கும் அதிகமான விலைக்கு மின்சாரம் வாங்குவதால் வாரியத்துக்கு நிதிச்சுமையும் கடனும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மத்திய அரசின் மின் நிலையங் களில் இருந்து யூனிட்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1.80 -ல் இருந்து அதிகபட்சம் ரூ.4 வரை விலை வைத்து மொத்தம் ரூ.5,800 கோடிக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அதானி, ஜிண்டால், ஸ்டெர் லைட், சிமென்ட்ஸ், தேசிய எரிசக்தி வர்த்தக நிறுவனம், கோத் தாரி, பன்னாரி சுகர், மெட்ராஸ் சுகர், ஹைடெக் இன்போ நிறுவனம் என 15-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களி டம் மொத்தம் ரூ.16,280 கோடி அளவுக்கு மின்சாரம் வாங்கப் பட்டுள்ளது.

இதில் ஜி.எம்.ஆர். பவர் கார்ப்பரேஷன், சாமல்பட்டி பவர் கார்ப்பரேஷன், பிள்ளைபெருமாள் நல்லூர் பவர் ஜெனரேஷன், மதுரை பவர் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களில் ஆண்டுக்கு சராசரியாக யூனிட்டுக்கு ரூ.14-க்கு அதிகமாகவும், எஸ்டிசிஎம்எஸ், எலக்ட்ரிக் நிறுவனம், அபான் பவர் நிறுவனம், பென்னா எலக்ட்ரிசிட்டி ஆகிய நிறுவனங்களில் சராசரியாக ரூ.5 என்ற விலையிலும் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. 7 தனியார் நிறுவனங்களிடம் இருந்து மட்டும் கடந்த நிதியாண்டில் ரூ.4,940 கோடிக்கு மற்ற நிறுவனங்களை விட அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப் பட்டுள்ளது.

இழப்பு அதிகரிப்பு

காற்றாலைகளில் அதிக மின்சாரம் கிடைக்கும் சீசனான மே முதல் அக்டோபர் வரையி லான மாதங்களிலும், தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்கியுள்ளதால், மின் வாரியத் துக்கு அதிக நிதிச்சுமை ஏற்பட்டு, இழப்பு வீதம் அதிகரித் துள்ளது. இதேபோல், கேரள மாநிலம் காயங்குளம் மின் நிலையத்திலிருந்து, சில மாதங்களுக்கு மட்டும் சராசரியாக யூனிட்டுக்கு ரூ.14 வரை விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தனி யாரிடம் மின்சாரம் வாங்குவது குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தகவல் அளித்துவிட்டோம். தமிழகத்தில் தங்கு தடையற்ற மின்சாரம் வேண்டும் என்று மக்கள் கேட்பதால், விலைக்கு வாங்கி பற்றாக்குறையை சமாளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது’’ என்றனர்.

குறிப்பிட்ட நான்கு தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, எந்த தனியார் நிறுவனங்களிடமும் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கக் கூடாது என்று ஏற்கனவே மின் வாரியத்தை, ஒழுங்குமுறை ஆணையம் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x