Published : 30 Mar 2014 02:54 PM
Last Updated : 30 Mar 2014 02:54 PM
‘தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரி வால் தமிழகம் வரவில்லை’என்று, அக்கட்சியின் தமிழக தேர்தல் பணிக்குழுத் தலைவர் டேவிட் வருண்குமார் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 18 தொகுதிக ளுக்கான ஆம் ஆத்மி வேட்பா ளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர். இன்னும் 5 அல்லது 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர். இவர்களை ஆதரித்து அரவிந்த் கேஜ்ரிவால் பிரச்சாரம் செய்ய வாய்ப்பில்லை. வாரணாசியில் நரேந்திரமோடியை எதிர்த்து போட்டியிடுவதால், அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டியிருக்கிறது. ஏப்ரல் 19, 20-ம் தேதிகளில் பிரசாந்த் பூஷன் கன்னியாகுமரியில் எஸ்.பி.உதயகுமாருக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்வார் என்றார்.
பிரச்சாரத்துக்கு கேஜ்ரிவால் வராதது, கட்சியினரிடம் ஏமாற் றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT