Published : 29 Mar 2014 06:53 PM
Last Updated : 29 Mar 2014 06:53 PM
கன்னியாகுமரி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் உதயகுமார் வேட்புமனு தாக்கல் செய்தார். நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளிலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக, இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக, இடிந்தகரை கிராமத்தில் தங்கியிருந்து போராட்டம் நடத்திய உதயகுமார், புஷ்பராயன், சேசுராஜ் ஆகியோர், இடிந்தகரையை விட்டு வெளியே வந்தால் கைது செய்யக்கூடும் என்ற அச்சம் காரணமாக, அங்கிருந்து வெளியே வரவில்லை.
கூடங்குளம் போராட்டக்குழுவினரை கைது செய்ய வேண்டாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதின் பேரில், இவர்கள் வேட்பு மனுத் தாக்கலுக்காக இன்று (சனிக்கிழமை) இடிந்தகரையை விட்டு வெளியே வந்தனர்.
கன்னியாகுமரி தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் உதயகுமார், நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் மீனவர், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வருவேன் என்று அவர் கூறினார்.
இதனிடையே, தூத்துக்குடி வேட்பாளர் புஷ்பராயன், பிற்பகலில் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்; திருநெல்வேலி தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் மை.பா.ஜேசுராஜூம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் இடிந்தகரையில் பெண்களால் தொடர்ந்து நடத்தப்படும் என்று ஜேசுராஜ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT