Published : 16 Mar 2017 01:06 PM
Last Updated : 16 Mar 2017 01:06 PM
ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணனின் மரணத்தை அடுத்து, 4 கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் கடந்த திங்கட்கிழமை தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டது. இது ஒரு மர்ம மரணம் எனக் கூறி, அவரது தந்தையான ஜீவானந்தம் டெல்லி போலீஸிடம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில்அவரின் உடல் புதன்கிழமை இரவு சென்னை வந்து, அங்கிருந்து சேலத்திற்கு சாலை வழியாக சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து அவரின் சொந்த ஊரில் 4 கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவை:
1. மரணமடைந்த முத்துக்கிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும்.
2. அவரின் சகோதரிகள் 3 பேருக்கும் அரசுப் பணி வழங்க வேண்டும்.
3. முத்துக்கிருஷ்ணனின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
4. பொன்.ராதாகிருஷ்ணன் மீது காலணி வீசியதால், கைது செய்யப்பட்ட மாணவரை விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு கூறி, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT