Published : 26 Oct 2013 03:17 PM
Last Updated : 26 Oct 2013 03:17 PM
டெங்கு காய்ச்சல் சென்னையில் பரவி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது.
சென்னை அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில் இந்த மாதத்தில் மட்டும் ஆறு குழந்தை கள் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதன் முதன்மை குழந்தைகள் நல மருத்துவர் கே.ஜெயசந்திரன் கூறினார். இதுகுறித்து 'தி இந்து' நிருபரிடம் பேசிய அவர் மேலும் கூறுகையில், "மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மருத்துவமனைக்கு வரும் பத்து குழந்தைகளில் இரண்டு பேருக்கு டெங்கு இருப்பது தெரியவந்துள்ளது.
வீடுகளில் கொசுக்கள் வரா மல் பாதுகாப்பாக வைத்து கொள்வதுபோல் பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் அவசியம்.
காலை நேர கொசுக்கடிதான் பொதுவாக டெங்கு காய்ச்சலை உண்டாக்குகிறது. அந்த நேரத்தில் பெரும்பாலும் பள்ளிகளில்தான் குழந்தைகள் இருப்பார்கள். தாழ்வாக பறக்கும் கொசு வகை இது என்பதால் பள்ளி இருக்கைகளின் அடிப்பகுதியை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.
அதேபோல், சென்னை எழும்பூர் குழந்தைகள் நலமருத்துவமனையில் தற்போது வரை ஆறு குழந்தைகள் டெங்கு அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஒன்றரை வயது குழந்தைக்கு உடலில் 2.5 லட்சமாக இருக்க வேண்டிய தட்டணுக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழாக குறைவது டெங்கு பாதிப்பின் முக்கிய அறிகுறியாகும்.
தேவை, சுத்தமான சுற்றுப்புறம். வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்வதுடன், பாத்திரங்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை மூடி வைக்க வேண்டும் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதே நோயைத் தடுக்கும் வழி.
"மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மருத்துவ மனைக்கு வரும் பத்து குழந்தைகளில் இரண்டு பேருக்கு டெங்கு இருப்பது தெரியவந்துள்ளது."
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT