Published : 23 Feb 2017 10:54 AM
Last Updated : 23 Feb 2017 10:54 AM
தாம்பரத்தை அடுத்துள்ள நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள நீர் நிலைகளில் வசிக்கும் முதலை களால் கிராம மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
வண்டலூர் உயிரியல் பூங்காவை ஒட்டி சதானந்தபுரம், நெடுங்குன்றம், ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், சதானந்தபுரத்தில் உள்ள ஒரு குளத்தில் முதலை இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டறிந்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். வனத்துறையினர் வந்து குளத்தில் இருந்த ஐந்தடி முதலையை பிடித்தனர். ஒரு குட்டி முதலையும் பிடிப்பட்டது. சில மாதங்கள் கழித்து ஒரு வீட்டின் முன்பகுதியில் படுத்திருந்த ஆறு அடி முதலையை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர். அடுத்த சில மாதங்கள், முதலை நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. மீன் பிடிக்க விரிக்கப்படும் வலைகளில் அவ்வப்போது சில முதலை குட்டிகள் சிக்கி வந்தன.
இந்நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் முதலைகளின் நடமாட்டம் தொடங் கியுள்ளது. அவ்வப்போது நீர் நிலைகளில் இருந்து முதலைகள் வெளியே வந்து, கிராம மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் ஏரியில் குளிக்கவும், அவ்வழியாக செல்லவும் அச்சம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் காட்டுத்தீபோல் பரவியதால் அப்பகுதி மக்கள் முதலை இருப்ப தாக சொல்லப்படும் ஏரிக்கு வந்து கூட்டம் கூட்டமாக கடந்த சில தினங்களாக பார்த்து வருகின்றனர்
இது குறித்து சதானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் கூறியதாவது:
எங்கள் கிராமத்தில் உள்ள சாமியார் மடகுளம், சதானந்தபுரம் ஏரி, நெடுங்குன்றம் ஏரிகளிலும் முதலைகள் அதிகமாக இருக் கின்றன. பறவைகள் மூலமாகவும் முதலை குட்டிகள் எங்கள் கிராம நீர்நிலைகளில் வந்தன.
அவ்வாறு வந்த முதலைகளே ஏரிகளில் வளர்கின்றன. வனத் துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் பல முதலைகளைப் பிடித்துள்ளனர். ஆனாலும் முதலைகள் குறையவில்லை. தற்போது ஆலப் பாக்கத்தில் உள்ள நீர் நிலையில் சுமார் 4 அடி நீளமும், 50 கிலோ எடை கொண்ட முதலை சுற்றி திரிகிறது. வனத்துறையினர் தொடர்ந்து நீர்நிலைகளில் உள்ள முதலைகளை முற்றிலும் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வண்டலூரில் செயல்பட்டு வரும் உயிரியல் பூங்காவில் முதலைகள் அதிகளவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள குட்டி முதலைகளை, பறவைகள் உண வுக்காக தூக்கிச் செல்கின்றன. அப்போது, அருகேயுள்ள சதானந்தபுரம், நெடுங்குன்றம், ஆலப்பாக்கம் ஏரி, குளங்களில் அவை விழுந்துள்ளது. இதற்காக பூங்கா நிர்வாகம் முதலைகள் பராமரிப்பு கூடத்தைச் சுற்றி பறவைகள் வராமல் இருக்க வலை போட்டுள்ளது.
பூங்காவில் இருந்து வந்த குட்டிகள் தற்போது வளர்ந்து பெரியதாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக 20க்கும் மேற்பட்ட முதலைகள் பிடிக்கப் பட்டுள்ளது. ஏரிக்கு தண்ணீர் அருந்த வரும் குட்டி ஆடுகளை யும், கிராமங்களில் திரியும் கோழி களையும், ஏரி மீன்களையும் இவை உண்டு வாழ்கின்றன. அவ்வப்போது பொதுமக்களிட மிருந்து தகவல் வரும். நாங் களும் முதலைகளைப் பிடித்து வருகிறோம். தற்போது மீண்டும் முதலையைப் பிடிப்பதற்கு நட வடிக்கை எடுக்கப் படும்’’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT