Published : 04 Jun 2016 12:30 PM
Last Updated : 04 Jun 2016 12:30 PM
அரசுப் பள்ளி மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற உழைத்த ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சொந்த செலவில் தங்க மோதிரங்களை பரிசாக வழங்கி பாராட்டி வருகிறார் கல்லூரணி ஊராட்சித் தலைவர் மீனாட்சி மோகன்குமார். மேலும், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்திட முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வைப்பு நிதி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், கல்லூ ரணி ஊராட்சித் தலைவர் மீனாட்சி. இவரது கணவர் மோகன்குமார். இவர் முன்னாள் அரசு வழக்கறிஞர். கல்லூரணியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களையும், ஆசிரி யர்களையும் ஊக்குவிக்கும் வகை யில் ஆண்டுதோறும் பரிசு வழங்கி கவுரவிக்கின்றனர்.
இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 33 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி அளவில் மாணவன் சபாபதி 477 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவன் பார்த் தசாரதி 448 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி சௌந்தர்யா 442 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற் றுள்ளனர். மேலும், 400 மதிப் பெண்களை 8 மாணவர்கள் பெற்று ள்ளனர்.
இவர்களை பாராட்டவும், நூறு சதவீத தேர்ச்சிக்கு உழைத்த தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர் உதயகுமார், ஆசிரியர்கள் பானுமதி (தமிழ்), பிச்சைமணி (ஆங்கிலம்), எட்வின் செல்வராஜ் (கணிதம்), அறிவியல் ரதி ஜுலா பிளாரன்ஸ் (அறிவியல்), ராஜேஸ்வரி (சமூக அறிவியல்). ராம்குமார் (உடற்கல்வி ஆசிரியர்) ஆகிய 7 பேருக்கு தலா அரை பவுன் தங்க மோதிரங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
முதலிடம் பெற்ற மாணவருக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் தங்கப் பதக்கம், இரண்டாமிடம் பெற்ற மாணவருக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பதக்கம், மூன்றாமிடம் பெற்ற மாணவிக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டன. 400-க்குமேல் பெற்ற 8 மாணவர்களுக்கு தலா ரூ.1500 மற்றும் பதக்கம் வழங்கப்பட்டன.
இது குறித்து `தி இந்து’விடம் ஊராட்சித் தலைவர் மீனாட்சி கூறியதாவது: கிராமப்புற மாண வர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பாராட்டி வருகி றோம். அதற்கு காரணமான ஆசிரி யர்களுக்கும் கடந்த இரண்டு ஆண்டாக தங்க மோதிரங்கள் பரிசு வழங்கி வருகிறோம். இந்தாண்டு இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகின்றன. அதை மாற்றும் வகையில் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வைப்பு நிதி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளோம். இதை எங்களது சொந்த செலவில் செய்து வருகிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT