Published : 13 Nov 2014 08:45 AM
Last Updated : 13 Nov 2014 08:45 AM

தமிழக வாக்காளர் எண்ணிக்கை 5.48 கோடியாக உயர்வு: 16.28 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பம்

தமிழகம் முழுவதும் கடந்த 25 நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி 16.28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். தற்போதைய வரைவுப் பட்டியல்படி, தமிழக வாக்காளர் எண்ணிக்கை 5.48 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆண்டுதோறும் ஜனவரி முதல் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியில் 18 வயது பூர்த்தியாவதை தகுதியாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள், கடந்த அக்டோபர் 15-ம் தேதி தொடங்கியது.

இதில், 2 ஞாயிற்றுக்கிழமை களில் சிறப்பு முகாம்களும் நடத் தப்பட்டன. வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்குதல், முகவரி மாற்றம் போன்றவற் றுக்காக வாக்குச் சாவடி அதிகாரி களிடமும், ஆன் லைன் மூலமும் விண்ணப்பம் அளித்தனர்.

இதுகுறித்து, தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத் தின்படி, வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழக வாக்காளர் களின் எண்ணிக்கை 5 கோடியே 48 லட்சத்து 70 ஆயிரத்து 296 ஆக உள்ளது. இதில் ஆண்கள் 2 கோடியே 74 லட்சத்து 20 ஆயிரத்து 556 பேர். பெண்கள் 2 கோடியே 74 லட்சத்து 46 ஆயிரத்து 615 பேர். இதர வகை யினர் 3,125 பேர் உள்ளனர்.

இம்முறை வாக்காளர் சிறப்பு முகாம் குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசியல் கட்சிகளும் பெருமளவில் பட்டியல் திருத்த நடவடிக்கைகளுக்கு ஒத்து ழைப்பு அளித்தன. இதன் அடிப் படையில் அதிக அளவுக்கு விண் ணப்பங்கள் வந்துள்ளன. தமிழகம் முழுவதும் 25 நாட்களில் மொத்தம் 20 லட்சத்து 68 ஆயிரத்து 420 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இதில் பெயர் சேர்த்தலுக்காக மட்டும் மொத்தம் 16 லட்சத்து 28 ஆயிரத்து 600 விண்ணப்பங்கள் (ஆன் லைன் மூலம் 62,303) வந்துள்ளன. வெளிநாடு வாழ் வாக்காளர்கள் பெயர் சேர்க்க 225 விண்ணப்பங்களும், பெயர் நீக்கத்துக்காக மொத்தம் 42 ஆயிரத்து 832 விண்ணப்பங்களும், பெயர் திருத்தத்துக்காக 2 லட்சத்து 86 ஆயிரத்து 208 விண்ணப்பங்களும் வந்துள்ளன. முகவரி மாற்றத்துக்காக ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 555 விண்ணப்பங்கள் தாக்கலாகின.

இந்த விண்ணப்பங்களின் விவரங்கள் குறித்த உண்மைத் தன்மையை விசாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. தவறான, போலி விண்ணப் பங்கள் கண்டறியப்பட்டபின், முழு மையான திருத்தப்பட்ட பட்டியல் ஜனவரி 5-ம் தேதி வெளியாகும். இவ்வாறு அந்த செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் துறை வெளியிட்டுள்ள வரைவுப் பட்டியலின்படி, தமிழகத் தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 26 ஆயிரம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பங்களின் உண்மைத் தன்மையை விசாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. போலி விண்ணப்பங்கள் கண்டறியப்பட்டபின், திருத்தப்பட்ட பட்டியல் ஜனவரி 5-ல் வெளியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x