Last Updated : 27 Jan, 2014 12:00 AM

 

Published : 27 Jan 2014 12:00 AM
Last Updated : 27 Jan 2014 12:00 AM

பிரச்சினைகளுக்கு காரணமாகும் சமூக வலைதளங்கள்- அண்மைக்கால சோக நிகழ்வுகள் ஆதாரம்

மனித உறவுகளின் தொடர்பை மேம்படுத்துவதற்காக வந்த சமூக வலைதளங்கள், இன்று பல் வேறு பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளதாக கூறப்படு கிறது. அந்தரங்க விஷயங்களை நிமிடத்துக்கு நிமிடம் சமூக வலை தளங்களில் பகிர்வதால் ஏற்படக் கூடிய விபரீத பின்விளைவுகளைப் பற்றி நம்மில் பலரும் சிந்தித்ததாக தெரியவில்லை. இதற்கு சமீபத்திய உதாரணம், மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் பரிதாபமான முடிவு.

சுனந்தா புஷ்கர் மரணமடைந்ததற்குகூட அவரது ட்விட்டர் பக்கத் தில் நடந்த சண்டைச் சச்சரவு களைத்தான் காரணமாக சொல் கிறார்கள். இது ஒருபுறமிருக்க பேஸ் புக்கில் சிலர் தங்களது அன்றாட நடவடிக்கைகளைகூட ஸ்டேட்ட ஸாக போட்டு வருகிறார்கள். சில வசதியான இளைஞர்கள், அப்பா விலையுயர்ந்த கார் பரிசளித் தார், ஐ-போன் வாங்கித்தந்தார்.. என்பது போன்ற ஸ்டேட்டஸ்களை போடுவதை வழக்கமாக வைத்துள் ளார்கள். இதை கவனிக்கும் சிலர் சம்பந்தப்பட்ட நபரை கடத்தி பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபடவும் வாய்ப்புகள் அதிகமுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் சென்னை பள்ளிகரணையைச் சேர்ந்த சித்ரா (பெயர் மாற்றப்பட் டுள்ளது) என்ற பெண், வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந் தார். போலீஸ் விசாரணையில், ‘நான் வீட்டில் தனியாக இருக்கிறேன்’ என்ற அவரது ஸ்டேட்டஸை பார்த்த அவரது பேஸ் புக் நண்பர்கள் இருவர் வீட்டுக்கே வந்து அவரை பலாத்காரம் செய்து கொலை செய்தது வெளிச்சமானது.

மேலும் வேலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணை பல மாதங்களாக காதலித்தார்.

காதலி கேட்டபோதெல்லாம் ஆயிரக்கணக்கில் பணத்தையும் வாரி இறைத்தார். நேரில் சந்திக்க வேண்டுமென்று அந்த இளைஞர் கேட்க, ஒரு சில நாட்களில் அந்த பெண்ணின் ஐ.டி.யே மாயமானது. இதில் மன உளைச்சல் அடைந்த அந்த இளைஞர் தற்கொலை வரை சென்று மீண்டுள்ளார்.

இந்தப் பிரச்சினைகள் குறித்து சைபர் கிரைம் குற்றப்பிரிவின் முன் னாள் கூடுதல் கண்காணிப்பாளர் எஸ். பாலு கூறுகையில், “பேஸ்புக், ட்விட்டரை பயன்படுத்துபவர்கள் முன் பின் தெரியாதவர்களை நண்ப ராக்கி கொள்ளக்கூடாது. தெரிந்த வரிடமிருந்து நட்பு வேண்டுகோள் வந்தாலும், அந்த பக்கம் உண்மையி லேயே அவருடையது தானா என்ப தையும் சோதிக்க வேண்டும். முக் கியமாக ஸ்டேட்டஸ் போடும்போது கவனமாக இருக்கவேண்டும்” என்றார்.

2012-ம் ஆண்டின் கணக்கெடுப் பின்படி சமூக வலைதளங்களில் 147 கோடி பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த எண்ணிக்கை 2013-ம் ஆண்டின் இறுதியில் 173 கோடியாக உயர்ந்திருக்கிறது. உலகில் நான்கில் ஒருவர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவ தாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

முழுக்க முழுக்க மனித உறவை யும், தொடர்பையும் மேம்படுத்து வதற்காக வந்ததாக சொல்லப்படு கிறது. ஆனால் கடந்த கால சம்பவங் கள் சிலவற்றை வைத்து பார்க்கும் போது சமூக வலைதளங்களால் பிரச்சினைகளே அதிகம் என்பது உறுதியாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x