Published : 02 Apr 2017 08:20 AM
Last Updated : 02 Apr 2017 08:20 AM

‘ஆட்டிசம்’ குழந்தைகளை சாதனையாளர் ஆக்கலாம்: தனித்திறன்களை கண்டுபிடித்தால் சாத்தியம்

இன்று சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

1996-97-ம் ஆண்டுகளில் ஆயிரம் குழந்தைகளுக்கு ஒரு ‘ஆட்டிசம்’ (மதியிறுக்கம்) குழந்தை பிறந்தது. தற்போது 1000 குழந்தைகளில் 2 ‘ஆட்டிசம்’குழந்தைகள் பிறக்கின் றன. நாளுக்கு நாள் ஆட்டிசம் குழந்தைகளின் எண்ணிக்கை அதி கரிக்கிறது. ஆனால், ‘ஆட்டிசம்’ குழந்தைகளை உலகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. இவர் களை ஏற்பதும் குறைவாகவே இருக்கிறது.

இதுகுறித்து மதுரை குழந்தை கள் வழிகாட்டி மையத்தின் மனோ தத்துவ நிபுணர் ஏ.ராணி சக்கர வர்த்தி கூறியதாவது:

‘ஆட்டிசம்’ குழந்தைகள் மன வளர்ச்சி குறைந்தவர்கள் அல்ல. அறிவுக் கூர்மையானவர்கள். நாம் எதிர்பார்க்கும் நேரத்தில் அவர்கள் செயல்படுவதில்லை.

ஞாபகசக்தி அதிகம்

‘ஆட்டிசம்’ குழந்தைகளுக்கு மொழி, சமூக வளர்ச்சி, விளையாடும் விதம் பாதிக்கப்பட்டிருக்கும். மற்ற செயல்பாடுகளில் சாதாரண குழந் தைகளைப்போல இருப்பர். இந்தக் குழந்தைகளின் நடை, உடை பாவனையில் பெரிய வித்தியாசம் தெரியாது. ஞாபகசக்தி மிக அதிகம். அவர்கள் தேவையை தெளிவாக வெளிப்படுத்துவர்.

3 வயதுக்கு முன், இக்குழந்தை களை கண்டறிவது சிரமம். ஆனால், 2 வயதுக்கு முன்னால் இந்தக் குழந்தைகளிடம் உள்ள நிலைப் பாடுகளை (குறைபாடு அல்ல) கண்டுபிடித்து, அதற்கு தகுந்த பயிற்சியும், பெற்றோரின் புரிதலும், அரவணைப்பும் இருந்தால் மற்ற குழந்தைகளைப்போல சாதாரண பள்ளிகளில் இவர்களையும் சேர்க் கலாம். 4, 5 வயதுக்குப் பிறகு ‘ஆட்டிசம்’ பாதிப்பை கண்டுபிடிக் கும் போது பயிற்சி கொடுப்பதிலும், பெற்றோர் கையாளுவதிலும், பள்ளி யில் சேர்ப்பதிலும் சங்கடங்கள் ஏற்படுகின்றன. ‘ஆட்டிசம்’ குழந்தை கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு அதீத திறமையுடன்தான் பிறந்திருப் பர். குழந்தைகளிடம் இருக்கும் தனித்திறமைகளை பெற்றோர் தேட வேண்டும். அந்தத் தேடுதலை ஆரம்பிக்காதபோதுதான், அவர் களை சிறப்புப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டி இருக்கிறது.

இந்தக் குழந்தைகளிடம் உள்ள சில குறைபாடுகளை பெரிதுபடுத்தி, அதை சரிசெய்வதில்தான் குறி யாக இருக்கிறார்களே தவிர, அந்தக் குழந்தைகளுடைய நிறைகளை கண்டுபிடிக்க முயற்சிப்பதில்லை. ‘ஆட்டிசம்’ குழந்தைகளை, சாதா ரண குழந்தைகளாகவும், சாதனை யாளர்களாகவும் உருவாக்குவதில் பெற்றோருக்குத்தான் அதிக பங்கு இருக்கிறது. முதலில் பெற்றோர் ஏற்றுக்கொள்ள வேண்டும். வெட்கப் படக்கூடாது. பொது வெளிகளில் ஆட்டிசம் குழந்தைகளை மாறுபட்ட எண்ணத்தோடு பார்க்கக் கூடாது.

காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை

‘ஆட்டிசம்’ குழந்தைகள் பிறப்புக் கான காரணம் என்ன என்பது, தற்போது வரை கண்டுபிடிக்கப் படவில்லை. அதனால், இந்தக் குழந்தைகள் எங்கு வேண்டுமென் றாலும், யாருக்கும் பிறக்கலாம். இவர்களும் மற்ற குழந்தைகளைப் போல கல்வி, விளையாட்டு உள்ளிட்ட எல்லா தேவைகளும் உள்ளவர்கள்தான். பெரும்பாலான தனியார் பள்ளிகள் அவர்களை சேர்ப்பதில்லை. அரசுப் பள்ளிகளில் மற்ற வகை மாற்றுத்திறன் குழந்தைகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம், இந்தக் குழந்தை களுக்கு கிடைப்ப தில்லை. தனியார் பள்ளிகளுக்கு முன்மாதிரியாக அரசுப் பள்ளிகளில் ‘ஆட்டிசம்’s குழந்தைகளைச் சேர்க்க வேண்டும். அதற்கான ஆசிரியர்கள், வசதி களை ஏற்படுத்த வேண்டும் என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x