Published : 17 Nov 2014 10:23 AM
Last Updated : 17 Nov 2014 10:23 AM
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வரும் பெண்கள் பாலியல் துன்புறுத் தலுக்கு ஆளாவதைத் தடுப்பதற் கான கொள்கை ஆவணத்தை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடு வோர் மீது பணியிடை நீக்கம், பணிநீக்கம் போன்ற கடும் நடவடிக் கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வரும் பெண்களுக்கு பாலின பாகுபாடு மற்றும் பாலியல் துன்புறுத்தல் நேரிட்டால், அதைத் தடுத்து, நீக்க உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள இந்த கொள்கை ஆவணம் வழிவகை செய்கிறது.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண், உடனடியாக தங்கள் மேலதிகாரியிடம் முறையி டலாம். தனக்கு பாலியல் துன் புறுத்தல் நடந்தாலோ அல்லது வேறு யாருக்காவது பாலியல் துன் புறுத்தல் நடப்பதைப் பார்த்தாலோ அதுகுறித்து உள்விசாரணைக் குழுவின் உறுப்பினர் செயலா ளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவிக்கலாம்.
புகார் மீது உள்விசாரணைக் குழு அளிக்கும் தீர்வு, ஏற்புடைய தாக இல்லாவிட்டாலோ அல்லது தீர்வினை எதிர்தரப்பு ஏற்காவிட்டாலோ விசாரணைக் கான ஓர் உப குழுவை அமைத்து, உண்மை அறிவதற்காக முழு விசாரணை நடத்த உத்தரவிடப் படும். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள், புகார்தாரர்கள், சாட்சியாளர்கள் ஆகியோரின் முழுவிவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
விசாரணைக் குழுவின் அறிக்கை அடிப்படையில் கண்டனமோ அல்லது பணியிடை நீக்கம், பணி நீக்கம், வளாகத்துக்குள் நுழைய தடைவிதித்தல், இழப்பீடு போன்ற வேறு தண்டனையோ வழங்கி உத்தரவிடுவார். பாலியல் துன்புறுத்தல் செய்தவர் மீது துறைவாரி ஒழுங்கு நடவடிக்கை அல்லது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் தலைமை நீதிபதி பரிந் துரைக்கலாம் என்று குறிப் பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT