Last Updated : 17 Jul, 2016 12:14 PM

 

Published : 17 Jul 2016 12:14 PM
Last Updated : 17 Jul 2016 12:14 PM

அரசு போக்குவரத்து பணியை துறந்து இயற்கை விவசாயத்தில் அசத்தும் ஓட்டுநர்

கிருஷ்ணகிரி அருகே பணியை கைவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர், இயற்கை விவசாயத்தில் அசத்து கிறார்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள மேல்சோமார்பேட்டையைச் சேர்ந்தவர் விவசாயி மோரனஅள் ளி(95). இவரது மகன்கள் சித் தப் பன், குட்டி(43). இவர்கள் 2 பேருக் கும் அரசு போக்குவரத்துக் கழகத் தில் ஓட்டுநராக பணி கிடைத்தது.

இதில், இயற்கை விவசாயம் செய்வதற்காக, குட்டி தனது அரசுப் பணியில் இருந்து விலகினார். இதையடுத்து அன்றிலிருந்து இன்றுவரை தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் இயற்கை முறையில் நெல், மா உள்ளிட்ட வற்றை சாகுபடி செய்து வருகி றார். அது மட்டுமின்றி, எதிர்கால தலைமுறையினருக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்பதற்காக, அப்பகு தியில் உள்ள படித்த இளைஞர்கள், உறவினர்களுக்கு விவசாயம் சார்ந்த பயிற்சிகளையும் அளித்து வருகிறார். பொறியியல் படித்து வரும் அவரது மகன் விக்னேஷ், பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங் களில் பணிபுரியும் இளைஞர்க ளும் விவசாய பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, முதல் போக சாகு படிக்காக நிலத்தை சீர் செய்யும் பணியை மேற்கொண்ட குட்டி கூறியதாவது: விவசாயம் சார்ந்த குடும்பத்தில் பிறந்ததால், இயற்கை விவசாயம் மீது இளம்வயதில் இருந்தே ஆர்வம் இருந்தது. எனது தந்தை, நாங்கள் அரசுப் பணிக்கு செல்ல வேண்டும் என விரும்பினார். அதன்படியே, எனக்கும், எனது அண்ணனுக்கும் அரசுப் பேருந்து ஓட்டுநர் பணி கிடைத்தது. பணியில் இருந்த எனக்கு, இயற்கை விவசாயம் செய்ய ஆர்வம் இருந்ததால், 2 வரு டங்களில் பணியிலிருந்து விலகி விவசாயம் செய்து வருகிறேன்.

நகரின் வளர்ச்சியால், விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. இதற்கு அஞ்சியே, எனது மகன், அவரது நண்பர்களுக்கு விவசாயம் செய்யும் முறை குறித்துத் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறேன்.

ரசாயன உரங்களைப் போடு வதால் நிலங்கள் நாளுக்கு நாள் மாசடைந்து வரும் நிலையில், நெல் சாகுபடிக்கு செடி, கொடி, இலைகளைப் பறித்து உரமாகப் பயன்படுத்தி வருகிறோம். மேலும், சனப்பை எனப்படும் செடியை வளர்த்து, நிலத்தில் உழவு செய்தால் மண்ணில் தழைச்சத்து அதிகம் கிடைக்கும். மேலும், தற்போது செம்மறி ஆடுகளை நிலங்களில் இரவு நேரங்களில் பட்டி போடுகிறோம். இதனால், ஆடுகளின் கழிவுகள் நிலத்துக்கு இயற்கை உரமாக மாறுகிறது. வேளாண்மைத் துறை அதிகாரிகள் இயற்கை விவசாயம் குறித்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x