Last Updated : 06 Mar, 2017 11:34 AM

 

Published : 06 Mar 2017 11:34 AM
Last Updated : 06 Mar 2017 11:34 AM

உறுப்பினர் சேர்க்கை பட்டியலோடு அதிருப்தியாளர்கள் திடீர் மாயம்: தீபா பேரவையில் தொடங்கியது கோஷ்டி பூசல்

தீபா பேரவையில் கன்னியாகுமரி மண்டலத்துக்கு பொறுப்பாளர் நியமிக்கப்பட்ட நிலையில், உறுப்பினர் சேர்க்கை பட்டியலோடு அதிருப்தியாளர்கள் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீபா பேரவைக்காக பலர் குழுக் களாக சேர்ந்து தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த பல்வேறு சந்தேகங்களால் அதிருப் தியடைந்த பல இளைஞர்களும், அதிமுகவை சேர்ந்த பலரும் தீபா பேரவையில் இணைந்தனர்.

நாகர்கோவில் கிறிஸ்துநகர் பகுதி அதிமுக வட்டச் செயலாளராக இருந்த உதயன், ரசாக், செந்தில் முருகன் ஆகியோர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடந்தது. பேர வையின் மாவட்ட பொறுப்பை எப்ப டியாவது பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் மூவரும் இப்பணியில் தீவிரம் காட்டினர்.

பட்டியலுடன் மாயம்

இந்நிலையில் தீபா மற்றும் அவரது கணவர் இடையே ஏற்பட்ட பிளவால் பேரவைக்கு இருவரும் தனித்தனியாக நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டனர். இதனால் தீபா ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி உருவானது. இதற்கிடையே குமரி மண்டல தீபா பேரவை பொறுப்பாளராக செந்தில் முருகன் நியமிக்கப்பட்டார்.

நேற்று சென்னையிலிருந்து குமரி திரும்பிய அவர், தனது ஆதரவாளர்களுடன் ஆரல்வாய் மொழியிலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனால் பேரவையை சேர்ந்த ஒருபிரிவினர் கடும் அதிருப்தி அடைந்தனர். உறுப் பினர்கள் சேர்க்கை பட்டியலுடன் அவர்கள் மாயமாகினர்.

தீபாவிடம் முறையிட முடிவு

இதுகுறித்து தீபா பேரவை அதிருப்தியாளர்கள் தரப்பினர் கூறும் போது, ‘‘குமரி மாவட்டத்தில் உதயன் தலைமையில் செயல்பட்ட எங்களது தரப்பில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை உறுப்பினர்களாக சேர்த்தோம். பேரவை தலைமையில் ஏற்பட்ட குழப்பத்தால் மாவட்டத்தின் நிர்வாக பொறுப்பு உழைத்தவர்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது தீபா அறிவித்திருக்கும் பேரவை நிர்வாகிகளுடன் நாங்கள் இணைந்து செயல்படப் போவதில்லை.

இதுவரை சேர்க்கப்பட்ட உறுப் பினர்கள் விவரம் அடங்கிய பட்டிய லுடன் பொறுப்பாளர்கள் சிலர் மாய மாகி விட்டனர். பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் செல்பேசியை அவர்கள் அணைத்து வைத்துள்ள னர்.

எனவே, அதிருப்தியாளர்கள் ஒன்றுகூடி தீபாவை நேரில் சந்தித்து முறையிடலாம் என முடி வெடுத்துள்ளோம் என்றார். தீபா பேரவைக்கு மண்டல பொறுப் பாளர் நியமிக்கப்பட்ட உடனேயே குமரியில் கோஷ்டி பூசல் ஆரம்பித் துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரம் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டிருப்பதை அதிமுவினர் நேற்று கொண்டாடினர். தீபா பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டிய செண்பகராமன்புதூர் பகுதியில் நேற்று அவர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x