Published : 30 Jul 2016 11:05 AM
Last Updated : 30 Jul 2016 11:05 AM
மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கான அரசின் சலுகைகளை எளிதில் பெறும் வகையில், எளிய தமிழில் வலைதளம் ஒன்றை உருவாக்கி உள்ளது மாற்றுத்திறனாளிகள் துறையின் விழுப்புரம் மாவட்டப் பிரிவு.
மனதளவில் ஊனமாக இருக்கும் பலருக்கு மத்தியில் உடலளவில் மட்டும் ஊனம் சுமப்பவர்கள் மாற்றுத்திறனாளிகள். அக்கறை யும், சரியான வழிகாட்டுதலும் சமூகத்தில் இருந்து கிடைக்கத் தொடங்கியிருப்பதால் இவர்க ளும் சக மனிதர்களைபோல் அனைத்துத் துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். ஆனாலும் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பற்றவர்களாக இருக்கின்றனர். வளரும் நாடுகளில் உள்ள மாற்றுத்திறனாளியாக உள்ள குழந்தைகளில் 90 சதவீதம் பேர் பள்ளிக்குச் செல்வதில்லை என யுனெஸ்கோ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
உலக அளவில் உள்ள அனைத்து அரசுகளுமே மாற்றுத் திறனாளிகள் நலனில் அக்கறை செலுத்தத் தொடங்கியிருக்கிற காலம் இது. தமிழக அரசும் மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் அமைத்தல், இலவச கணினி பயிற்சி, செல்போன் பயிற்சி, கருப்புக் கண்ணாடிகள் மற்றும் மடக்கு ஊன்றுகோல்கள், கல்வி உதவித் தொகை, காதொலி கருவிகள் மற்றும் சூரிய ஒளியி னால் மின்சக்தி பெறும் பேட்டரிகள் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்க ளை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாற்றுத்திறனாளி களுக்கான நடமாடும் சிகிச்சைப் பிரிவு வாகனத்தையும் தமிழக முதல்வர் செயல்படுத்தியுள்ளார் . இந்த சிறப்பு வாகனங்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில், இயன் மு றைச் சிகிச்சை கருவிகளோடு செயல்திறன் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, பிறந்த குழந்தைகளைப் பரிசோதனை செய்தல், ஆரம்ப நிலையில் குறைகளைக் கண்ட றிதல், உதவி உபகரணங்களுக் கான மதிப்பீடு செய்தல், பயிற்சி அளித்தல், அனைத்து வகையான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக் கும் விளையாட்டு முறையில் சிகிச்சை அளித்தல் ஆகியவற்றுக்கு தேவையான நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த நடமாடும் சிகிச்சைப் பிரிவு வாகனம் மூலம் தற்போது, 6 வயது வரையிலான மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு இயன்முறைப் பயிற்சி, காது கேளாதவர்களுக்கான பேச்சுப் பயிற்சி, முடநீக்கியல் சாதனங்க ளுக்கான மதிப்பீடு ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.
இந்த தகவல்களையெல்லாம் ஒன்று திரட்டி மாற்றுத்திறனாளிகள் அறியும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் தனி வலைதளம் ஒன்றை எளிய தமிழில் உருவாக் கியுள்ளனர்.
மாவட்ட அலுவலர் விளக்கம்
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் நாத் கூறும்போது, “விழுப்புரம் மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டம். இந்த மாவட்டத்தில் மட்டும் 72 ஆயிரம் மாற்றுத் தி றனாளிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழ் படிக்கத் தெரியுமே தவிர எழுதத் தெரியாது. அவர்கள் எளிதில் அரசின் சலுகைகளை அறிந்து கொள்ள ஏதுவாக தமிழில் வலை தளத்தை உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் அரசின் நலத்திட்டங் களை அறிந்துகொள்வதோடு, அவர்களுக்குத் தேவையான விண் ணப்பங்களையும் தமிழிலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்கிறார்
மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த இணையதளத்தை அடைய, விழுப்புரம் மாவட்ட அரசுத் துறை இணையதளத்தினுள் viluppuram.tn.nic.in சென்றால் District Differently Abled Welfare Office தொடர்பை கிளிக் செய்தால் மாற்றுத்திறனாளிகள் குறித்த தகவல்கள் தமிழில் இருக்கும். விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை மற்ற துறைகளின் விவரங்கள் எதுவும் தமிழில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT