Published : 22 Mar 2014 11:45 AM
Last Updated : 22 Mar 2014 11:45 AM

இளவயது திருமண தடைச்சட்டத்தை முறையாக செயல்படுத்துங்கள் : குழந்தைகள் கூட்டமைப்பு கோரிக்கை

இளவயது திருமண தடைச் சட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் அருணோதயா குழந்தைகள் சங்கங்களின் கூட்டமைப்பு வைத்துள்ளது.

இதுகுறித்து அருணோதயா குழந்தைகள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஸ்ருதி, தர், ஜெகதீஷ், வைதேகி, விக்னேஷ், அரவிந்த், சுமதி ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

6 வயது முதல் 14 வரை இலவச கட்டாயக் கல்வி என்பதை 18 வயது வரை என அறிவிக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப் பதற்கான சட்டம், இளவயது திருமண தடைச் சட்டம் ஆகிய வற்றை சரிவர செயல்படுத்த வேண்டும். அனைத்துப் பள்ளிக ளிலும் சரியான முறையில் பாலியல் கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.

மீனவக் குழந்தை களை பழங்குடியினர் பட்டிய லில் சேர்க்க வேண்டும். மக்கள் தொகைக்கேற்ப பொதுக் கழிப்பிடம் அமைத்து சரிவர பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட குழந்தை கள் மேம்பாட்டுக்கான கோரிக்கை களை நடைபெறவுள்ள நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எங்கள் சார்பில் குரல் கொடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகள் அடங்கிய புத்தகத்தை அனைத்து வேட்பாளர் களுக்கும் கொடுப்போம். எங்களது கோரிக்கைகளை அக்கறை யோடு செவிமடுத்துக் கேட்கும் வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று எங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x