Last Updated : 28 Oct, 2015 04:23 PM

 

Published : 28 Oct 2015 04:23 PM
Last Updated : 28 Oct 2015 04:23 PM

அதிக தள்ளுபடி வழங்குவதற்காக சிவகாசி பட்டாசுகள் விலை கடும் உயர்வு

வாடிக்கையாளர்களுக்கு அதிக தள்ளுபடி வழங்குவதற்காக பட்டாசு ஆலைகள் தங்கள் பட்டாசு களின் விலையை கடுமையாக உயர்த்தி விற்பனை செய்கின்றன. ஆனால் கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது என்பதால் பட்டாசு பிரியர்கள் சிவகாசியில் குவியத் தொடங்கியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 767 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் லட்சக்கணக்கான வியாபாரிகள் மூலம் நாடு முழுவதும் விற்ப னை செய்யப்படுகின்றன. தீபா வளி பண்டிகையே பட்டாசு விற்பனை யின் இலக்கு.

தமிழகத்தைவிட வட மாநிலங் களில் பட்டாசு விற்பனை எப்போதும் அதிகமாகக் காணப்படும். இந்த ஆண்டு பருவநிலை மாறுபாடு, பணப்புழக்கம் குறைவு போன்ற காரணங்களால் வட மாநில ங்களில் பட்டாசு விற்பனை மந்தம டைந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் தற்போது பட்டாசு விற்பனை சூடுபிடிக்கத் தொ டங்கியுள்ளது. நவம்பர் 10-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகத்தில் பல்வேறு பகுதி களில் உள்ள சில்லரை விற்பனையாளர்களும், வாடிக் கையாளர்களும் மொத்தமாகப் பட்டாசு வாங்க சிவகாசியில் குவியத் தொடங்கியுள்ளனர்.

வாடிக்கையாளர்களை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக பட்டாசு விற்பனை யாளர்கள் குறைந்தபட்சம் 10 முதல் அதிகபட்சம் 50 சதவீதம் வரை தள்ளுபடி கொடுக் கின்றனர். வாடி க்கையாளர்களுக்கு அதிகபட்ச தள்ளுபடி கொடுப்பதற்காக பட்டாசுகளில் குறிப்பிடப்படும் அதிகபட்ச விற்பனை விலை பல மடங்கு அதிகமாக குறிப்பி டப்படுகிறது.

நூறு ரூபாய் விலை கொண்ட ஒரு பட்டாசு பெட்டியில் அதன் அதிகபட்ச விற்பனை விலை ரூ.800 என அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், வாடிக்கையாளருக்கு அதே பட்டாசு 50 சதவீத தள்ளு படியில் ரூ.400-க்கு விற்பனை செய்யப்படும். இதனால், எந்த பட்டாசு ரகத்துக்கு எவ்வளவு விலை என்பதை அறியாமல் வாடிக்கையாளர்கள் குழப்பமடைவதும், சில விற்பனை யாளர்களால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதும் உண்டு.

இது குறித்து பட்டாசு ஆலை உரிமையாளரும் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஏ.பி.செல்வராஜன் கூறியதாவது:

புனா, பெங்களூர், ஓசூர் ஆகிய பகுதிகளில் 50 சதவீதம் தள்ளுபடி என்று அறிவித்தால் மட்டுமே பட்டாசு வாங்க பொதுமக்கள் வருவார்கள். ஏனெனில் வியாபாரிகள் அந்த அளவுக்கு தள்ளுபடி கொடுத்து மக்களை பழக்கப்படுத்திவிட்டனர். ஆனால், தமிழகத்தில் அந்த நிலை இல்லை.

விற்பனை விலை பல மடங்கு அதிகமாகக் குறிப்பிடப்படுவதால் மக்களிடம் பட்டாசு விற்ப னை மீதான நம்பிக்கை குறைந் துவிடும். எனவே, நியாயமான விலை மட்டுமே அச்சிடப்பட வேண்டும். அப்போது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பட்டாசு கிடைப்பதோடு, விற்பனையும் அதிகமாகும்.

தரமாக பட்டாசு தயாரி க்கும் நிறுவனங்கள் வாடிக்கை யாளர்களுக்கு அதிக தள்ளுபடி கொடுப்பதில்லை. 5 சதவீத தள்ளுபடி கொடுத்தாலே பெரிது. ஆனால், ஒரு சில நிறுவனங்கள் விற்பனை விலையை அதிகமாக அச்சிட்டு 50 சதவீதம் வரை தள் ளுபடி கொடுப்பது தொடர்கிறது. இதனால், மக்களிடம் நம்பகத் தன்மை குறைகிறது.

எனவே, பட்டாசுகளில் நியாயமான விலையை மட்டுமே குறிப்பிட்டு உரிய விலையில் விற்பனை செய்ய பட்டாசு நிறுவனங்கள் முன்வர வேண்டும். பட்டாசுகளுக்கான விலையை அரசு நிர்ணயம் செய்தால் சிறப்பாகவும், ஒரே மாதிரியான விலையிலும் பட்டாசுகளை விற்பனை செய்ய முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x