Published : 18 Mar 2014 12:00 AM
Last Updated : 18 Mar 2014 12:00 AM
செயின் பறிப்பு கொள்ளையனை விரட்டிச் சென்று பிடித்த இளைஞர் படை வீரரை காவல் ஆணையர் பாராட்டினார்.
சென்னை ராஜமங்கலம் 200 அடி சாலையில் ஒரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேளச்சேரியை சேர்ந்த ஆசிரியை ரமணி (50) வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது, ரமணி அணிந்திருந்த 3 சவரன் செயினை ஸ்கூட்டரில் வந்த 2 பேர் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
ரமணியின் அபயக் குரலை கேட்டு, அங்கே பாதுகாப்புக்கு நின்றிருந்த இளைஞர் படையைச் சேர்ந்த வீரர் ராஜேஷ் அவர்களை துரத்திச் சென்றார். செயினை பறித்த கொள்ளையன் ஸ்கூட்டரில் ஏறுவதற்கு முன்பே மற்றொரு கொள்ளையன் வண்டியை வேகமாக ஓட்டியதால் அவரால் வண்டியில் ஏற முடியவில்லை. தப்பித்து ஓடிய கொள்ளையனை ராஜேஷ் விரட்டிச் சென்றார். பாடி மேம்பாலத்தில் ஏறிய கொள்ளையன் தப்பிப்பதற்காக பாலத்தில் இருந்து குதித்ததால் அவரது கால் முறிந்துவிட்டது. இதனால் ராஜேஷிடம் அவர் சிக்கிக் கொண்டார். பிடிபட்டவரின் பெயர் சுதாகர். அவர் கொடுத்த தகவலின் பேரில், ஸ்கூட்டரில் தப்பிச் சென்ற மற்றொரு கொள்ளையன் வீரமணியும் பிடிபட்டார்.
குற்றவாளியை விரட்டிச் சென்று பிடித்த இளைஞர் படை வீரர் ராஜேஷை காவல் ஆணையர் ஜார்ஜ் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT