சென்னையில் தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு: நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை

சென்னையில் தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு: நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை

Published on

சென்னையில் நேற்று நள்ளிரவு மயிலாப்பூர், மந்தைவெளி தபால் நிலையங்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை பிடித்துள்ள காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றிரவு மயிலாப்பூர், மந்தைவெளி தபால் நிலையங்களில், மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.

தபால் நிலையத்தின் ஜன்னல் கதவுகளை திறந்தும் பெட்ரோல் குண்டுகளை உள்ளே வீசியுள்ளனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் தபால் நிலையத்தில் லேசான தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in