Published : 16 Jun 2016 12:04 PM
Last Updated : 16 Jun 2016 12:04 PM
மதுரையில் ஒருவழிப் பாதை, ‘நோ என்ட்ரி’யில் நுழைவது போன்ற விதிமீறல்களில் ஈடு படும் பள்ளி வாகனங்களால் விபத்துகள் அதி கரிக்கும் அபாயம் ஏற்பட் டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் சுமார் 1200 கல்வி நிறுவன வாகனங்கள் இயங்குகின்றன. பள்ளி நாட்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை வீடுகளில் இருந்து குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக பள்ளி வாகனங்கள் நகருக்குள் செல்கின்றன. அதே வாகனங்கள் மாலை 3.30 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை பள்ளியில் இருந்து குழந்தைகளை வீட்டில் விடுவதற்காக நகருக்குள் செல் கின்றன.
இந்த பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்களில் பெரும்பாலானோர் சாலை விதிகளை சரியாகக் கடைபிடிப்பதில்லை எனப் புகார் எழுந்துள்ளது. குழந்தைகளை ஏற்றும் அவசரத்திலும், சுற்றிச் செல் வதை தவிர்க்கவும் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்ட சாலையிலும், ஒருவழிப் பாதையில் எதிர் திசையிலும் வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச் செல்கின்றனர்.
தகுதிச் சான்று பெறாத வாகனங்களை பள்ளி குழந் தைகளை ஏற்றிச் செல்வதற்கு சில பள்ளிகள் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் தகுதிச் சான்று பெறாத பள்ளி வாகனம் கிடாரிப்பட்டி அருகே வயலில் கவிழ்ந்ததில் 11 குழந் தைகள் காயமடைந்த சம்பவம் நடைபெற்றது. இதேபோல, தகுதிச் சான்று பெறாத வாகனங்களில் பள்ளிக் குழந்தைகள் ஏற்றிச் செல்வது அதிகளவில் நடை பெறுகின்றன.
இதுகுறித்து கோ. புதூரைச் சேர்ந்த மோகன்ராம் கூறியதாவது: ‘நகருக்குள் காலை, மாலையில் பள்ளி வாகனங்களால் அதிக நெருக்கடி ஏற்படுகிறது. குழந் தைகள் வாகனத்தில் ஏறி அமர்ந்து விட்டனரா என்பதை உறுதி செய்யும் முன்பே, வாகனத்தை அவசர அவசரமாக எடுத்து விடுகின்றனர். இதனால் குழந்தைகள் சிலர் கீழே விழுந்து காயமடைய நேரிடுகிறது.
பள்ளி வாகன ஓட்டுநர்களில் பலர், பள்ளி நேரம் தவிர்த்து பகல் நேரத்தில் ஆட்டோ ஓட்டுகின்றனர். இதனால் விதி மீறலில் ஈடுபடுகின்றனர். இந்த விதிமீறலை தவிர்த்து பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிகாரிகள், சம்ப ந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT