Published : 03 Feb 2014 09:10 AM
Last Updated : 03 Feb 2014 09:10 AM

எதிர்காலத் தலைமுறையினருக்காக ஐம்பூதங்களை காப்பது நமது கடமை: முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேச்சு

எதிர்காலத் தலைமுறையினருக்கு நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் ஆகிய ஐம்பூதங்களை காப்பாற் றித் தர வேண்டியது நமது கடமை என்று உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறினார்.

மக்கள் ஒற்றுமை, விழிப்பு ணர்வு, இயக்கம் ஆகியவை மூலம் தான் வாழ்வாதாரப் பிரச்சினை களுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உலக சதுப்பு நாளையொட்டி சென்னை லயோலா கல்லூரியில் பூவுலகின் நண்பர்கள், லயோலா கல்லூரி என்விரோ கிளப் ஆகி யவை இணைந்து ஐம்பூத சுற்றுச் சூழல் விழாவை ஞாயிற்றுக் கிழமை நடத்தின. இதையொட்டி, நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை தொடங்கி வைத்து உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம், ஓரளவுக்கு ஆறு தலைக் கொடுத்துள்ளது. நிலம் கையகப்படுத்துதலால் ஏழை மற் றும் நடுத்தர மக்கள் வாழ் வாதாரத்தை இழந்து அவதிப்படு கின்றனர். தமிழ்நாட்டில் நிலத்தை கையகப்படுத்தும்போது அதை எதிர்த்து இயக்கம் உருவாவ தில்லை. பாதிக்கப்பட்டவர்கள் நஷ்டஈடு வாங்கிக் கொண்டு போய்விடுகிறார்கள். நிலம் கைய கப்படுத்துதல் என்ற பெயரில் நடக்கும் மோசடி நாடகத்தை அம்பலப்படுத்த ஒரு இயக்கம் தொடங்க வேண்டும்.

சாயப்பட்டறைகளால் நொய் யல் ஆறு மாசுபட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கழிவுநீரை சுத்தி கரித்து வெளியேற்றும் வரை சாய, சலவை ஆலைகளுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. சில ஆலை அதிபர் கள் விதிவிலக்கு கேட்டு நீதிமன்றம் வந்தனர். அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் நொய்யல் ஆறு கூவமாக மாறிவருகிறது.

ஸ்டெர்லைட் ஆலை போன்ற விவகாரங்களில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் இடையே உள்ள பிரச்சினையை மக்களுக் குப் புரியவைக்க வேண்டும்.

ஆகாயத்தைப் பொருத்தவரை அலைக்கற்றை மூலம் கிடைக் கும் கோடிக்கணக்கான ரூபாயைப் பற்றித்தான் பேசுகிறார்கள். பறவை யினங்கள் அழிவதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பறவையினங்கள் இல்லாவிட் டால், மகரந்த சேர்க்கை கிடை யாது. அது நடைபெறாவிட்டால், பூ, காய், கனிகள் கிடையாது.

நெருப்பை இயற்கை வாயு என்று எடுத்துக் கொண்டால், 8 மாவட்டங்களில் எரிவாயு குழாய் பதிக்க கெயில் நிறுவனம் முயற்சி மேற்கொண்டது. குழாய் பதித்துவிட்டால் அந்த நிலத்தைப் பயன்படுத்த முடியாது.

காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்க முயற்சி மேற் கொள்ளப்படுகிறது. அதுதொடர் பான வழக்குத் தீர்ப்பில் வளர்ச்சி ஒரு சிலருக்காக மட்டும் இருக்கக் கூடாது. பொதுமக்களுக்கான தாக இருத்தல் அவசியம். வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது அதற்காகப் போராடு வதில் தவறில்லை. வாழ்வாதாரத் தைப் பாதிக்கச் செய்து இங்கே யும் நந்திகிராமத்தை உருவாக்கி விடாதீர்கள் என்றுதான் தெரிவித் திருந்தேன். வாழ்வாதாரப் பிரச் சினைக்கு நீதிமன்றம் மூலம் மட்டும் நிரந்தர தீர்வு காண முடியாது. மக்களிடம் ஒற்றுமை, விழிப்பு ணர்வு மற்றும் இயக்கத்தால் மட்டுமே தீர்வு காண முடியும்.

காற்று மாசுபடுவதைத் தடுக்கும் சட்டம் பலவீனமாக உள்ளது. காற்றை மாசுபடுத்தியதாகக் கூறி ஸ்டெர்லைட் ஆலைக்கு பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ரூ.100 கோடி நஷ்டஈடு கொடுத்துவிட்டு, ஆலையைத் திறக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 10 தலைமுறைக்கு மாறாத நஷ்டத்தை இந்த நஷ்டஈடு எப்படி ஈடுசெய்யும். எதிர்காலத் தலைமுறையினருக்காக நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை காப்பாற்ற வேண்டியது நமது கடமை.

இவ்வாறு நீதிபதி கே.சந்துரு கூறினார்.

இக்கருத்தரங்கில், மூத்த பத்திரிகையாளர் ஞாநி, பேராசிரி யர் க.நெடுஞ்செழியன், லயோலா கல்லூரி துணை முதல்வர் தன்ராஜ், அரச்சலூர் செல்வம் ஆகியோர் பேசினர். முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x