Published : 08 Nov 2014 09:25 AM
Last Updated : 08 Nov 2014 09:25 AM

சென்னையில் இன்று குடும்ப அட்டை குறைதீர்வுக் கூட்டம்: 16 மண்டலங்களில் நடக்கிறது

குடும்ப அட்டையில் மாற்றம் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்த குறைதீர்வுக் கூட்டம் சென்னையில் இன்று (சனிக்கிழமை ) நடக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத் துறை நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்ப தாவது: உணவு பொருள் வழங் கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறை சார்பாக சென் னையில் உள்ள உணவு பொருள் வழங்கல் துறையின் 16 மண்டலங்களில் இன்று (சனிக் கிழமை) குறைதீர்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் 1 மணி வரை இந்த கூட்டம் நடைபெறும். குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடை களின் செயல்பாடுகள் உட்பட பல்வேறு குறைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் மனு கொடுக்கலாம்.

கீழ்க்கண்ட பகுதிகளில் குறை தீர்வுக் கூட்டம் நடைபெற உள்ளது:

சிதம்பரனார் - முத்தியால் பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ராயபுரம் - சென்னை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, எம் பி டி காலனி, பெரம்பூர் - சென்னை தொடக்கப்பள்ளி, (ஜி 3 காவல் நிலையம் எதிரில்), அண்ணாநகர் - சென்னை நடுநிலைப்பள்ளி, (அரும்பாக்கம் தபால் நிலையம் எதிரில்),அம்பத்தூர் - அரசினர் மேல்நிலைப்பள்ளி, சன்னதி தெரு (மதுரவாயல் மார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகில்), வில்லிவாக்கம் - பி.என். இ.சி.டி. காமராஜ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, திருவொற் றியூர் - சென்னை நடுநிலைப்பள்ளி, (எண்ணூர் பேருந்து நிலையம் அருகில்), ஆவடி - கலை மகள் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி, தி.நகர் - சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (சுதந் திர தினபூங்கா அருகில்) மயிலாப்பூர் - சென்னை மேல் நிலைப்பள்ளி, (தரமணி பேருந்து நிலையம் அருகில்) பரங்கிமலை - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தாம்பரம் - பீர்க்கன்கரணை பேரூராட்சி அலுவலக வளாகம், சைதாப்பேட்டை - அரசு மேல்நிலைப்பள்ளி, ஆயிரம் விளக்கு - சென்னை நடுநிலைப் பள்ளி, (புரசைவாக்கம் குளம் அருகில்), சேப்பாக்கம் - சமுதாய நலக்கூடம், (சிந்தாதிரி பேட்டை காவல்நிலையம் அருகில்),சோழங்கநல்லூர் - சென்னை மாநகராட்சி 183-வது வார்டு அலுவலகம் ஆகிய இடங் களில் குறைதீர்ப்பு கூட்டம் நடை பெறுகிறது.

குடும்ப அட்டைதாரர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x