Published : 17 Dec 2013 09:18 AM
Last Updated : 17 Dec 2013 09:18 AM

பொதுக்குழுவுக்குப் போய்தான் என்ன ஆகப் போகிறது? - கூட்டத்தை அழகிரி புறக்கணித்ததன் பின்னணி

‘காங்கிரஸோடு தேர்தல் கூட்டணி’ இல்லை என்ற செய்தி பிரதானமாகிப் போனதால், அழகிரி தி.மு.க. பொதுக் குழுவைப் புறக்கணித்த விவகாரம் பெரிதுபடுத்தப்படவில்லை. அதே நேரம், அழகிரியின் பொதுக்குழு புறக்கணிப்பு குறித்து கட்சிக்குள் பலதரப்பட்ட கருத்துகள் அலசப்படுகின்றன.

கிரானைட் வழக்கில் தனது மகன் துரை தயாநிதி மீது வழக்கு, தனது வலது, இடதுகரமாய் இருந்த ’பொட்டு’சுரேஷ் கொலை - அடுத்தடுத்து நடந்துவிட்ட இவ்வி ரண்டு சம்பவங்களுக்குப் பிறகு அழகிரி ரொம்பவே அமைதியாகிப் போனார். ஆளும் தரப்பில் சூழ்ச்சி செய்து தனக்கும் தனது மகனுக்கும் ஏதாவது நெருக்கடிகளை உண்டா க்கிவிடுவார்களோ என்ற பயம் அவருக்கு. அதனாலேயே கட்சி விவகாரங்களில்கூட தலையிடுவ தைத் தவிர்த்தார். கேட்டவர்களுக்கு, ’அண்ணனுக்கு கால் வலி.. கண் வலி’ எனக் காரணம் சொன்னார்கள் அழகிரியின் அடிப்பொடிகள்!

மனசாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள்: அழகிரி

இந்நிலையில், பொதுக்குழு வுக்கு போவதா வேண்டாமா என்று விசுவாசிகள் கேட்டபோது, ‘பொதுக்குழுவுக்குப் போய்தான் என்ன ஆகப் போகிறது? நான் போகவில்லை; நீங்கள் மனசாட்சிப் படி நடந்து கொள்ளுங்கள்’என்று மையமாக சொல்லிவிட்டு அமைதியாகி விட்டாராம் அழகிரி. அண்ணனே போகாதபோது நமக்கு என்ன வேலை என்று ஒதுங்கிவிட்டனர் அழகிரியின் ஆதரவாளர்கள்.

இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய அழகிரியின் அபிமானிகள் சிலர், எங்க தரப்புலருந்து போயி ருந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் முனியாண்டி, ‘தென் மாவட்ட தி.மு.க.வில் அழகிரியை கேட்காமல் தலைமை எந்த முடிவையும் எடுக்கக்கூடாதுன்னு பேசிருக்காரு. இதையே தாங்கிக்க முடியாம கூச்சல் போட்டு அவரை உட்கார வைச்சிருக்காங்க. அந்த இடத்துல நாங்களும் அண்ண னும் இருந்துருந்தோம்னா பதிலுக்கு ஏதாச்சும் நடந்திருக்கும். ஆத்திரத்துல அண்ணன் ஏதாச்சும் சொல்லிட்டு எந்திரிச்சு வந்திருப்பாரு. அதைத்தான் பெரிய விஷயமா பேசிருப்பாங்க.

நாங்க தலைவரோட குடும்பம் ஒத்துமையா இருந்தாத்தான் கட்சி நல்லா இருக்கும்னு நினைக்கிறோம். ஆனா இன்னொரு கூட்டம், குடும்பம் ரெண்டுபட்டுக் கிடந்தாத்தான் நம்ம ளுக்கு பொழப்பு ஓடும்னு நினைக் கிது.அவங்களுக்கு இடம் குடுக்க வேண்டாம்னுதான் அண்ணனும் நாங்களும் பொதுக்குழுவுக்குப் போகல’’ என்கிறார்கள்.

காங்கிரஸை கழற்றியதை அழகிரி ரசிக்கவில்லை

“பொதுக்குழுவுக்கு போகாவிட்டாலும் அங்கே என்ன நடக்கிறது என்பதை வீட்டிலி ருந்தபடியே லைவ்வாக கேட்டுக் கொண்டிருந்தார் அழகிரி’’ என்று சொல்பவர்கள் “காங்கிரஸோடு கூட்டணி இல்லை என்ற முடிவை அவர் அவ்வளவாக ரசிக்கவில்லை’’ என்கிறார்கள்.

எத்தனை போராட்டங்களை நடத்தினார் அழகிரி?

ஸ்டாலின் தரப்பிலிருந்து பேசியவர்களோ, “பொதுக்குழுவில் தனது கருத்தை தைரியமாக எடுத்துச் சொல்வதை விட்டுவிட்டு அழகிரி எதற்காக புறக்கணிக்க வேண்டும்? தனக்கு அதிகாரம் இல்லை என்று சொல்பவர், கட்சியை வலுப்படுத்த தென் மாவட்டங்களில் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக எத்தனை போராட்டங்களை நடத்தி னார். எத்தனை கூட்டங்களில் முழங்கினார்?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x