Published : 16 Nov 2013 01:33 PM
Last Updated : 16 Nov 2013 01:33 PM

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கு தமிழக அரசு ரூ.2 கோடி நிதி

அடுத்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருக்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்த தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி அளிக்க தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: 2012-2013 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியினை சிறப்பாக நடத்த அதிக அளவு நிதி உதவியினை தமிழக அரசு அளித்து உதவ வேண்டும் என்று தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சென்ற ஆண்டு அளித்த கோரிக்கையினை ஏற்று, நிதி உதவித் தொகையை 1 கோடி ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

மேலும் பன்னாட்டு அளவிலான டென்னிஸ் போட்டிகள் நடத்துவதற்கு வசதியாக சென்னை டென்னிஸ் விளையாட்டரங்கை மேம்படுத்துவதற்காக ஏற்கெனவே 4 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆண்டும் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் விளையாட்டு அரங்கில் 30.12.2013 முதல் 5.1.2014 வரை நடைபெற உள்ள சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டிக்கு 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் 2014, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளிலும் இப்போட்டிகளை தொடர்ந்து சிறப்பாக நடத்திட 2 கோடி ரூபாய் வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x