Published : 28 Jan 2017 09:57 AM
Last Updated : 28 Jan 2017 09:57 AM

கடந்த 11 ஆண்டுகளாக தமிழர்களை பாடாய்படுத்திய ஜல்லிக்கட்டு தடை சட்டம்: காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியல் அறிய ஆர்வம்

மாணவர் போராட்டத்தால் ஜல்லிக் கட்டு தடை நீங்கியதால் தற் போது தமிழகம் முழுவதும் பொது மக்கள், ஜல்லிக்கட்டுக்கு சிக்கல் ஏற்படுத்திய ‘காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியல்’ பற்றிய தகவல்களைத் தேடி ஆர்வமாக அறிந்து வருகின்றனர்.

வனத்துறை பாதுகாப்பு சட்டத் தின்கீழ் வன விலங்குகளை அவற்றின் முக்கியத்துவத்தைப் பொறுத்தும், எண்ணிக்கையைப் பொறுத்தும் வகைப்படுத்தி 6 பிரிவாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்ற வன விலங்குகளை வேட்டையாடவோ, வேட்டையாட முயற்சித்தாலோ தண்டனைக்குரியதாக பார்க்கப்படு கிறது. அதுபோல், மிருக வதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ் மனிதர்களால் வதைபடுத்தப்படும் மற்றும் அதற்கான வாய்ப்புள்ள விலங்குகள் பட்டியலிடப்பட்டு, அவை காட்சிப்படுத்தப்பட்ட, காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் என பட்டியல் தயாரிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி ஜல்லிக்கட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதனால், காளைகளை மிருக வதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், காட்சிப்படுத்தப்பட்ட தடை விதிக் கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் சேர்த்தது. இந்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2014-ம் ஆண்டு, ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் நிரந்தர தடை விதித்தது. அதன்பின், 2015, 2016-ம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடை பெறவில்லை.

இந்நிலையில், இந்த பொங்க லுக்கும் ஜல்லிக்கட்டு நடத்த முடியா மல் போனதால் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, தற்போது ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர தடை நீங்கியுள்ளது.

இந்நிலையில், பொதுமக்களில் பெரும்பாலானோருக்கு ‘காட்சிப் படுத்தப்படும் விலங்குகள் பட்டி யல்’, ‘காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியல்’ பற்றிய குழப்பம் இருந்து வருவதையடுத்து, தற்போது அதுகுறித்தத் தகவல் களைத் தேடிப் பிடித்து அறிந்து வருகின்றனர்.

இதுகுறித்து மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் காந்தி கூறியதாவது:

மத்திய அரசு 2001-ல் கொண்டு வந்த காட்சிப்படுத்தும் விலங்கு கள் பதிவு விதிகள் பிரிவு 2-ன் படி, திரைப்படங்கள் போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் அல்லது பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கும் நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் விலங்குகள்தான் காட்சிப்படுத் தப்படும் விலங்கு என குறிப் பிடப்படுகிறது.

1960-ம் ஆண்டு, மிருக வதை பிரிவு 22-ல் மத்திய அரசு எந்த ஒரு விலங்கினத்தையும், அரசிதழ் அறிவிப்பு மூலம், காட்சிப்படுத்தத் தடை செய்யப்பட்ட விலங்குகளின் பட்டியலில் சேர்க்க அதிகாரம் வழங் கப்பட்டது. இதைத் தொடர்ந்து காட்சிப்படுத்தும் விலங்குகளை எவ்வாறு அந்தக் காட்சிகளில் பயன்படுத்த வேண்டும்? பொது மக்களை எவ்வாறு பார்வையிட அனுமதிக்க வேண்டும்? அந்த விலங்குகளைப் பாதுகாப்பாக எப்படி நடத்துவது? மருத்துவ உதவிகள் எப்படி செய்வது போன்ற வரையறைகளை வகுத்து கடந்த 2001-ம் ஆண்டு காட்சிப்படுத்தும் விலங்குகள் பதிவு விதிகள், கொண்டுவரப்பட்டது.

உதாரணமாக, நாய் போன்ற விலங்குகளை சர்க்கஸில் பயன் படுத்த வேண்டுமென்றால் இந்த விதிகளின் கீழ் முறைப்படி பதிவு செய்யப்பட்டு, கால்நடை மருத்துவர்களிடம் உரிய மருத்துவச் சான்று பெற்று, அரசு அதிகாரி களிடம் சமர்ப்பிக்கப்படும்போது அவர் அந்த நிகழ்வுகளில் பங்கெடுக்க அனுமதிப்பார்.

மத்திய அரசு தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கடந்த 2.3.1991-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்ச கம் மூலம் வெளியிட்ட அறிக்கை யின்படி கரடி, குரங்கு, புலி, சிறுத்தை, சிங்கம், மற்றும் நாய் ஆகியவை காட்சிப்படுத்தத் தடை செய்யப்பட்ட விலங்குகளின் பட்டி யலில் சேர்க்கப்பட்டன.

ஜல்லிக் கட்டுக்கு சிக்கல் ஏற்பட்டதற்கு இந்தப் பட்டியலில் மத்திய அரசு, காளையை சேர்த்ததுதான் காரணம். தற் போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தால் இனி ஜல்லிக்கட்டுக்கு எந்தப் பிரச்சினை யும் இருக்காது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x