Published : 14 Feb 2014 12:00 AM
Last Updated : 14 Feb 2014 12:00 AM
சேலம் வருமான வரித் துறை அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கொளத்தூர் மணியை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பதற்கான உத்தரவை 5.11.2013 அன்று சேலம் மாநகர காவல் ஆணையர் பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து கொளத்தூர் மணியின் சகோதரர் டி.எஸ்.பழனிச்சாமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என வியாழக்கிழமை தீர்ப்பளித்தனர். இது தொடர்பான சேலம் மாநகர காவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT