Published : 06 Mar 2017 09:24 AM
Last Updated : 06 Mar 2017 09:24 AM

தளவாய் சுந்தரத்துக்கு பதவி வழங்கியதன் பின்னணி; கன்னியாகுமரிக்கு இரட்டை பிரதிநிதித்துவம்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சராக உள்ள நிலையில், அதே மாவட் டத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரம் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட் டுள்ளார். இதன் மூலம் கன்னி யாகுமரிக்கு டெல்லியில் இரட்டை பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு எம்எல்ஏக்களே இல்லாத மாவட்டம் கன்னியா குமரி. இதேபோல் கடந்த மக்கள வைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற ஒரே தொகுதியும் கன்னியா குமரிதான். இத்தொகுதியில் போட்டியிட்டு வென்ற பொன்.ராதாகிருஷ்ணன் நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை இணையமைச்சராக உள்ளார். மேலும், தமிழகத்தில் மத்திய அரசின் ஒரே அமைச்சரவை பிரதிநிதியும் இவர்தான்.

தற்போது கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டெல்லியில் மத்திய, மாநில அரசுகளின் மூலம் இரட்டை பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. பொன்.ராதாகிருஷ்ணனும், தளவாய் சுந்தரமும் இணைந்து செயல்பட்டால் தமிழகத்துக்கு கூடுதல் பலன் கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பதவி கிடைத்தது எப்படி?

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின் பெரிய அளவில் சலசலப்புகள் ஏற்பட்டன. கன்னி யாகுமரி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், விஜய குமார் எம்.பி. ஆகியோரின் ஆதரவு நிர்வாகிகள் சிலர் ஓபிஎஸ் அணி மற்றும் தீபா பேரவைக்கு சென்ற னர். ஆனால் தளவாய் சுந்தரம் ஆதரவாளர்கள் மட்டும் மாற்று முகாமுக்கு செல்லவில்லை. இதேபோல் அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், சசிகலாவை விமர் சித்து வந்தார். அவரை அதிமுகவிலேயே தக்க வைத்ததில் தளவாய் சுந்தரம் பெரும்பங்காற்றினார்.

அதிமுகவில் மாநிலங்களவை உறுப்பினர், அமைச்சர் என பல பதவிகளிலும் இருந்த தளவாய் சுந்தரத்துக்கு கடந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தோல்வியடைந்தார். ஆனால் அவர் ஆற்றிய கட்சிப் பணிகள் காரணமாக அமைப்பு செயலாள ராக நியமிக்கப்பட்டார். டிடிவி தினகரனுடன் நெருங்கிய தொடர் பில் இருந்த தளவாய் சுந்தரம், தற்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரியில் அதிமுக வுக்கு சட்டப்பேரவையில் பிரதி நிதித்துவமே இல்லாத நிலை யில், கேபினட் அந்தஸ்து கொண்ட இப்பதவி குமரி மாவட் டத்தைச் சேர்ந்தவருக்கு வழங் கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x