Published : 03 May 2017 09:48 AM
Last Updated : 03 May 2017 09:48 AM
விபத்தில் சிக்காமல் வாகனங்களை இயக்குவதற்கு ஓட்டுநர்கள் அனைவரும் ஐபிடிஇ (I-IDENTIFICATION - உணருதல், P - PREDICTION - எதிர்பார்த்தல், D - DECISION - தீர்மானித்தல், E - EXECUTION - செயல்படுதல்) எனும் தத்துவத்தைப் பின்பற்ற போக்குவரத்துத் துறை வலியுறுத்தி உள்ளது.
இந்தியாவில் சாலைகளில் நடை பெறும் விபத்துகளில் மிகவும் மோசமானது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொள்வதாகும். இந்த விபத்து களில் அதிக உயிரிழப்புகள் ஏற்படு கின்றன. இந்தியாவில் கடந்த ஆண் டில் 5,01,423 சாலை விபத்துகளில் 1,46,133 பேர் உயிரிழந்துள்ளனர். 5 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். அந்த ஆண்டில் தமிழகத்தில் 69,059 விபத்துகளில் 15,642 பேர் உயிரிழந்துள்ளனர். 79,746 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்துகளைத் தவிர்க்க ஐபிடிஇ (உணருதல், எதிர்பார்த் தல், தீர்மானித்தல், செயல்படுதல்) தத்துவத்தைக் கடைபிடிக்க வேண் டும் என புதிய யோசனையை போக்குவரத்து துறை முன்வைத் துள்ளது. சாலையில் நின்று கொண்டு இருக்கும் வாகனத்தைக் கடந்து செல்லும்போது, முன் செல்லும் வாகனத்தை முந்திச் செல்ல முயலும்போது ஐபிடிஇ தத்துவத்தைப் பின்பற்ற வேண்டும் என வட்டார போக்குவரத்து அலு வலர் ஜெ.கே.பாஸ்கரன் (கோவை மேற்கு) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறிய தாவது:
இந்த தத்துவத்தில் குறிப்பிடப்பட் டுள்ள உணருதல் என்பது எதிர் வரும் மற்றும் குறுக்கிடும் வாகனம், ஆட்கள், விலங்குகள் அல்லது தடையை நேரில் பார்த்து உணர்ந்து கொள்வதை குறிக்கிறது. அடுத்தது எதிர்பார்த்தல் எனும் ஊகித்தல். இது ஒவ்வொருவரின் மனநிலை, உடல்நிலைக்கு ஏற்ப மாறுபடும். இதில் தவறும்போதுதான் அதிக அளவில் விபத்துகள் நடைபெறு கின்றன. ஊகித்தலைப் பொறுத்த வரை சுற்றுச்சூழல், சுற்றுப்புறத் தைப் பொறுத்து வேறுபடுகிறது.
வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது முன்னால் தெரியும் வாகனம் நிற்கிறதா, செல்கிறதா அல்லது அது பிராணியா, எவ்வளவு தூரத் தில் உள்ளது என்பதை சரியாக ஊகிக்க வேண்டும். பின்னர் அதனை முந்தலாமா, வேகத்தைக் குறைக்க லாமா என்பதை உடனடியாக தீர்மானிக்க வேண்டும். அடுத்து அந்த முடிவை உடனடியாக செயல் படுத்த வேண்டும். உணருதல், எதிர்பார்த்தல், தீர்மானத்தல், செயல் படுத்தல் ஆகியவற்றை சரியாக செய்யும்போது விபத்துகளைத் தவிர்க்கலாம்.
சாலையில் கவனம் இல்லாமல் செயல்படுவது, அதிவேக பயணம், போதையுடன் வாகனம் ஓட்டுவது, உடல்நிலை, மனநிலை சரியாக இல்லாமல் இருத்தல் போன்ற சமயங்களில் முடிவெடுப்பதில் சிரமம் ஏற்படும். பொதுவாக ஒரு செயலும், மறு செயலும் 0.3 - 0.6 விநாடியில் நடைபெற வேண்டும். அதில் தவறு ஏற்படும்போது விபத்து கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே ஐடிபிஇ தத்துவத்தைப் பின்பற்றி விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கவும், உயிரிழப்பு, காயங் கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும் அனைத்து ஓட்டுநர்களும் உழைக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT