Published : 26 Jul 2016 11:51 AM
Last Updated : 26 Jul 2016 11:51 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மனஉளைச்சலை தவிர்க்கும் வகையில் கவுன்சிலிங் மொபைல் வாகனம் மூலம் ஆலேசானைகள் வழங்கப்பட உள்ளது.
மாநில அளவில் பிளஸ் 2, 10-ம் வகுப்பு தேர்வில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆண்டுதோறும் சாதனை படைத்து வருகின்றனர்.
இம்மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் உட்பட 259 பள்ளிகளும், 112 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 371 பள்ளிகள் செயல்படுகின்றன.
இந்நிலையில், 100 சதவீதம் தேர்ச்சியை நோக்கி தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளும் சாதனை படைத்து வருகிறது. மாநில, மாவட்ட அளவில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்து வருகின்றனர். இதற்காக, அரசு, தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் அதிக அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
மேலும், தேர்வு முடிவுகள் வெளியாகும்போது, தேர்வில் அதிக மதிப்பெண், தோல்வி உள்ளிட்ட காரணங் களால் சில மாணவர்கள் தவ றான முடிவுகளை எடுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாணவ, மாணவி களுக்கு 'கவுன்சிலங் மொபைல் வாகனம்' மூலம் ஆலேசானை கள் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ‘தி இந்து’-விடம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மகேஸ்வரி கூறியதாவது:
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின், மன உளைச்சலை தடுக்கும் வகையில், கவுன்சலிங் மொபைல் வாகனம் செயல்படுத்தப்படுகிறது. இந்த வாகனத்தில் மனோதத்துவ நிபுணர் அடங்கிய குழுவினர், படங்கள், வீடியோ காட்சி மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வாகனம் வாங்கப்பட்டு, சில வாரங்களில் செயல்பாட்டிற்கு வரும். இந்த வாகனம் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று, ஆலோ சனை வழங்கப்பட உள்ளது. மேலும், மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் தனியார் பள்ளி மாணவர்களின் மனஉளைச்சலை கண்டறிந்து ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வேலூர், தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாகனம் மூலம் பள்ளி மாணவர் களுக்கு ஆலோசனைகள் வழங்கப் பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT