Published : 08 Apr 2017 08:42 AM
Last Updated : 08 Apr 2017 08:42 AM

‘ரெய்டு’கள் இத்தோடு நிற்காது: தென் மாநிலங்கள் மீது கவனத்தை திருப்பும் பாஜக - ஓ.பி.எஸ். அணிக்கு அரவணைப்பு; சசிகலா அணியை அலறவைப்பு

உத்தரபிரதேச தேர்தலில் பெற்ற பிரம்மாண்ட வெற்றி தந்த தெம்பை அடுத்து, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது தனது கவனத்தை திருப்புகிறது பாஜக. அதன் ஒரு அதிரடிதான் அமைச்சர் விஜயபாஸ் கருக்கு எதிரான ‘ரெய்டு’ நட வடிக்கை என்று கூறப்படுகிறது.

தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய ஆறு மாநிலங்களில் மொத் தம் 130 எம்.பி-க்கள் உள்ளனர். இதில் இப்போது பாஜக-வுக்கு 22 எம்.பி-க்கள் மட்டுமே உள்ளனர். வரும் தேர்தலில் இதை 50 ஆக உயர்த்துவதுதான் பாஜக-வின் இப்போதைய திட்டம் என்று அக் கட்சியின் உள்வட்டத்தினர் சொல் கிறார்கள். இந்த இலக்கை அடை வதற்கான அனைத்து உத்திகளை யும் மெதுவாக கையாளத் தொடங்கிவிட்டது பாஜக.

பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் பிராந்தியக் கட்சிகளை பிளவுபடுத்தி அதன்மூலமாக ஏற்படும் வெற்றி டத்தை தங்களுக்குச் சாதமாக்கி முன்னேறுவதுதான் பாஜக-வின் திட்டம். இதன்படி, உத்தரபிரதேசத் தில் சமாஜ்வாதி கட்சிக்குள் தந்தைக் கும் மகனுக்கும் மோதலை ஊதி விட்டு மக்கள் மத்தியில் அந்தக் கட்சியின் செல்வாக்கு சிதறடிக்கப் பட்டது. அங்கே தங்களுக்கு இவ் வளவு பெரிய மகத்தான வெற்றி கிடைக்கும் என பாஜக தலைவர் களே எதிர்பார்க்கவில்லை.

உ.பி. தேர்தல் வெற்றியை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன் னாள் மாநிலத் தலைவரான ரீட்டா பகுகுணா அமைச்சராக்கப்பட்டார். இப்போது உ.பி-யின் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத், முலாயம்சிங்கின் மருமகள் நடத் தும் கோசாலைக்கு விசிட் அடிக் கிறார். இதேபோல், அருணாச்சல பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங் களிலும் முன்னாள் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு தேர்தலில் வாய்ப் பளித்து அவர்களையும் அமைச்சர் களாக்கியது பாஜக. மேற்கு வங்கத் தில் மம்தா கட்சி எம்.பி-க்கள், அமைச்சர் உள்ளிட்டோர் வழக்கு களில் சிக்கவைக்கப்பட்டு சிறைக் கம்பிகளுக்குள் இருக்கிறார்கள்.

பிஹாரில் மக்கள் முதல்வராக போற்றப்படும் நிதீஷ்குமாரே, ‘‘பாஜக-வுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்க வேண்டும்’’ என்று பதறுகிறார். கர்நாடகத்தில் ‘ஆபரேஷன் தாமரை’ ஃபார்முலா மூலம் காங்கிரஸ் முக்கியத் தலை களை பாஜக-வின் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா. ‘நம்பி வருகிறவர்களுக்கு அமைச்சர் பதவி நிச்சயம்’ என்று அவர் விரிக் கும் வலையில் எஸ்.எம்.கிருஷ்ணா, சீனிவாச பிரசாத் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைகளே தடுமாறி விழுந்து கொண்டிருக் கிறார்கள்.

புதுச்சேரியில் பாஜக செய்ய வேண்டியதை ஆளுநர் கிரண் பேடியே கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறார். சந்திரபாபு நாயுடு தங்களின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இருப்பதால் ஆந்திராவில் இன்னமும் தனது சித்துவிளையாட்டை பாஜக தொடங்கவில்லை. கேரளத்தில் இடதுசாரிகளும் காங்கிரஸும் எஃகுக் கோட்டையாக நிற்பதால் அங்கே பாஜகவுக்கு இன்னும் சரியான பிடிகொம்பு கிடைக்க வில்லை. தமிழகத்தில் திமுக, அதிமுக-வைத் தவிர யாருக்கும் வாய்ப்பு இல்லை என்ற பலமான கருத்து உள்ளது. இப்போது அதற் கும் ஆப்பு வைத்துக் கொண்டிருக் கிறது பாஜக.

ஆளும் கட்சியான அதிமுக-வில் பிளவு உண்டாகிவிட்டது. அதில் ஒரு அணி பாஜகவின் கண்ணசைவுக்கு காத்திருப்பது ஊரறிந்த ரகசியம். கட்சியை ஒருமுகப்படுத்த நினைத்த சசிகலா சிறைக்குள் இருக்கிறார். அவ ருக்கு அடுத்த தலைமையாக பார்க்கப்படும் டி.டி.வி.தினகரனை ‘ஃபெரா’ வழக்கு துரத்துகிறது. அதேசமயம், ஓ.பி.எஸ். அணி தங் களை வலுப்படுத்திக் கொள்வதற்கு தேவையான அனைத்து மறைமுக உதவிகளும் அவர்களுக்கு கிடைக் கிறது. இதன் பின்னணியில் பாஜக உள்ளது என்பதற்கு பெரிய அரசியல் ஞானம் தேவையில்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

குறிவைக்கப்படலாம்..

இரட்டை இலை முடக்கத்தி லிருந்து ஓ.பி.எஸ்-ஸை கடுமை யாக விமர்சித்த அமைச்சர் விஜய பாஸ்கர் மீதான ரெய்டு நட வடிக்கை வரையிலான நிகழ்வுகள் இதை உறுதி செய்வது போல உள்ளன. இத்தோடு ரெய்டு நிற்கப் போவதில்லை. இன்னும் சில முக்கிய அமைச்சர்களும் அவர் களுக்கு நெருக்கமானவர்களும் நெருக்கப்படலாம். திமுக தரப் பிலும் முக்கியமான சிலர் குறிவைக்கப்படலாம்.

கடந்த கால வெற்றிகளால், பணமிருந்தால் எதையும் சாதிக்க லாம் என நம்புகிறது அதிமுக. அதைத் தடுக்க, அதிமுக-வுக்கு பணம் வரும் அனைத்து வழிகளை யும் அடைக்கப் பார்க்கிறது பாஜக. இதற்காக மணல் விவகாரம் உள்ளிட்ட அத்தனைக்கும் டெல்லி யிலிருந்து கடிவாளம் போடு கிறார்கள். அதிமுக-வுக்கு இத் தனை குடைச்சல்களையும் கொடுத் துக் கொண்டே தமிழகத்தில் தங் களை வலுப்படுத்திக் கொள்வதற் கான வேலைகளையும் முடுக்கி விட்டிருக்கிறது பாஜக தலைமை.

ஜூன் மாதம் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்ததும் தமிழகத்தில் பாஜக இன்னும் பல அதிரடிகளை அரங்கேற்றும். தருண் விஜய் போன்ற திடீர் தமிழ்க்காரர்கள் களத்தில் இறக்கிவிடப்பட்டு தமிழைத் தூக்கிப் பிடிக்கலாம். ரஜினிகாந்த் மாதிரியான கவர்ச்சித் தலைகள் பாஜக-வுக்குள் கொண்டு வரப்பட்டு இவர்தான் பாஜக-வின் முதல்வர் வேட்பாளர் என்று பிரகடனப்படுத்தப்படலாம். தற்போது பாஜக ஆளும் மாநிலங் களில் உள்ளதைப் போல மக்களை ஈர்க்கும் அதிரடித் திட்டங்கள் அமல்படுத்தப்படலாம்.

வட மாநிலங்களிலும் கர்நாடகத் திலும் கையாள்வதைப் போல், ‘எங்களோடு வருபவர்களுக்கு அமைச்சர் பதவி தருவோம்’ என்று மாற்றுக் கட்சிப் பிரபலங்களுக்கு வலைவிரிக்கப்படவும் வாய்ப்பு உண்டு.

காலம்தான் தீர்மானிக்கும்

அதேசமயம், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பாஜக இத் தனை வியூகங்களை எடுத்தாலும் ஐம்பது ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளிடமே கட்டுண்டு கிடக்கும் தமிழக மக்களிடம் காவிக் கட்சியின் கணக்கு பலிக்குமா? இதற்கு அரசியல் நோக்கர்களின் பதில்… ‘‘காலம்தான் தீர்மானிக்க வேண்டும்’’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x