Published : 25 Jul 2016 10:40 AM
Last Updated : 25 Jul 2016 10:40 AM
காணாமல் போன ஏஎன்.32 விமானம் ஆழ்கடலுக்குள் விழுந்திருந்தால் அதைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமம் என ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயருக்கு 29 வீரர்களுடன் சென்ற இந்திய விமானப்படையின் ஏஎன்.32 விமானம் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென ரேடார் கண்காணிப்பு கருவியில் இருந்து மாயமானது. இதுவரை இந்த விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், காணாமல் போன விமானம் ஆழ்கடலுக்குள் சென்றால் அதைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் என ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி வர்க்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
பொதுவாக கடல்பகுதியில் விமான விபத்துக்கள் நடைபெற் றால் அவற்றை இரண்டு விதமாக பிரித்து தேட முடியும். ஒன்று விமானம் வானில் வெடித்து சிதறி கடலில் விழுந்தால் அவற்றின் பாகங்கள் தண்ணீரில் மிதக்கக் கூடிய வாய்ப்புள்ளது. அல்லது விமானத்தின் எரிபொருள் தண் ணீரில் மிதந்தால் அந்த படலத்தை வைத்து விபத்துக்குள்ளான விமா னத்தைக் கண்டுபிடிக்க முடியும்.
ஆனால், சில நேரங்களில் விமானத்தில் ஏதேனும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு வானில் பறந்த அதே வேகத்தில் கடலுக்குள் விழுந்தால் பெரும் பாலும் அவை ஆழ்கடலுக்குச் சென்று விடும். அவ்வாறு ஆழ்கடல் பகுதியில் விழுந்துவிட்டால் அவற் றைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.
காரணம் இந்தியாவில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்கள் அதிகபட்சம் 600-ல் இருந்து ஆயிரம் அடி ஆழம் வரைதான் சென்று தேடும் திறன்படைத்தது. கடலின் அடிப்பகுதியில் எல்லா இடங்களிலும் ஒரே அளவிலான ஆழம் இருப்பதில்லை. 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் அடி வரை ஆழம் உள்ள பகுதிகள் உள்ளன. ஆழமான இடத்தில் தண்ணீரின் அழுத்தம் (பிரஷர்) அதிகமாக இருக்கும். அவ்வாறு அதிக ஆழம் உள்ள பகுதிகளில் விழுந் துவிட்டால் விமானத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.
அத்துடன் விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து வரும் சிக்னல்கள் அந்தப் பெட்டி விழுந்த இடத்தில் இருந்து 1 கி.மீ. சுற்றளவு மட்டுமே கிடைக்கும். எனவே அந்த சிக்னல்களை வைத்து கருப்புப் பெட்டியை கண்டுபிடிப்பதும் எளிதான காரியம் இல்லை.
கடந்த ஆண்டு கடலோர காவல்படைக்குச் சொந்தமான டார்னியர் விமானம் விபத்துக்குள் ளானது. சுமார் 40 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகுதான் அந்த விமானத்தின் உடைந்த சில பாகங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. அப்போது கூட அந்த விமானத்தின் இன்ஜின் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இவ்வாறு வர்க்கீஸ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT