Published : 30 Mar 2014 11:40 AM
Last Updated : 30 Mar 2014 11:40 AM
உயர்கல்விப் படிப்புகள் மற்றும் அதற்கான வாய்ப்பு கள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளும் நோக்கில் ‘தி இந்து’ எஜுகேஷன் பிளஸ் கேரியர் கவுன் சலிங்-2014 வழிகாட்டி நிகழ்ச்சி சென்னை வர்த்தக மையத்தில் வரும் ஏப்ரல் 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடக்கவுள்ளது.
மாணவர்களது எதிர்காலத்தை யும் வளமான வாழ்க்கையையும் தீர்மானிப்பதில் அவர்கள் தேர்வு செய்யும் உயர்கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. உயர்கல்வியில் புதிது புதிதாக பல படிப்புகள் அறிமுகமாகின்றன. அதைப் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டியது போட்டி மிகுந்த இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது.
புதிய வகை படிப்புகள், கல்வித் துறையில் ஏற்படும் மாற்றங்கள் உள்பட மாணவர்களுக்குத் தேவையான அம்சங்கள் குறித்து அவர்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் திங்கள்தோறும் ‘எஜுகேஷன் பிளஸ்’ பகுதி வெளியாகிவருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி வாய்ப்புகள், புதிய வகை படிப்புகள், அதிக வேலைவாய்ப்பு தரும் படிப்பு கள், அதை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து மாணவர்கள் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளும் விதமாக ‘தி இந்து’ எஜுகேஷன் பிளஸ் கேரியர் கவுன்சலிங்-2014 நடத்தப்படவுள்ளது. இதன்மூலம், கல்வி நிறுவனங்கள், கல்வியாளர் களுடன் மாணவர்கள் நேரில் கலந்துரையாடி தங்களுக்கு ஏற்ற படிப்புகள் மற்றும் பயனுள்ள தகவல்கள் குறித்து தெரிந்துகொள்ள முடியும். கல்வி நிறுவனங்களும் தாங்கள் வழங்கும் படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு எளிதில் தெரியப்படுத்த முடியும்.
நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் ‘தி இந்து’ எஜுகேஷன் பிளஸ் கேரியர் கவுன்சலிங் வரும் ஏப்ரல் 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடக்கிறது. இரண்டு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கவுன்சலிங் நிகழ்ச்சி நடக்கும். கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை இதில் பங்கேற்கின்றன.
வி.ஐ.டி. பல்கலைக்கழகம் இதன் ஸ்பான்சராக உள்ளது. பாரத் பல்கலைக்கழகம், டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம், முகம்மது சதக் குரூப், வேல்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவை அசோசியேட் ஸ்பான்சர்களாக உள்ளன.
கவுன்சலிங்கில் ஸ்டால் அமைப்பதற்கான முன்பதிவு மற்றும் இதர தகவல்களுக்கு: ஆர்.ரவி (9841416933).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT