Published : 04 May 2017 09:15 AM
Last Updated : 04 May 2017 09:15 AM

குதிரை சேணத்தில் பிரபலமான கோவை வியாபாரி

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந் திரா என தென்னிந்திய அளவில் குதிரைகளுக்குப் பயன்படும் சேணம் (Saddle) உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருபவர் கே.நடராஜன். கேரள மாநிலம் பரப்பனங்காடியைச் சேர்ந்த இவர் தற்போது கோவை யில் வசிக்கிறார்.

மலபார் போலீஸில் அதிகாரியாக இருந்த இவரது தந்தை, குதிரையில் ரோந்து செல்வதை பார்த்திருந்த நடராஜனுக்கு இளமையிலேயே குதிரைகள் மீது ஆர்வம் வந்து விட்டதாம். ஒருகட்டத்தில், ரேஸில் தகுதியிழந்த குதிரைகளை வாங்கி விற்கத் தொடங்கிய இவர், அதற்காக நாடு முழுக்க சுற்றியிருக்கிறார். 60-களில் நடராஜன் கான்பூர் சென்றபோது குதிரை சேணங்களை வாங்கி வந்து கோவையில் குதிரை வைத்திருக்கும் நண்பர்களிடம் காண்பித்திருக்கிறார். ஆனால் அதை அவர்கள் பொருட்டாக மதிக்கவில்லை. பிறகு அவரது சகோதரர், அந்த சேணத்தை குதிரைக்கு பயன்படுத்தியி ருக்கிறார். அதைப் பார்த்து அவரது நண்பர் மற்றொரு சேணத்தை நடராஜனிடம் வாங்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்தே கோவையில் சேணத்தை குதிரைக்காரர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்த அனுபவம் குறித்து கே.நடராஜன் கூறியதாவது: ரேஸ் குதிரைகளுக்கான சேணம் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்படுகிறது. அதன் விலை பல லட்சம். ஆனால், கான்பூரில் கிடைப்பது ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரைதான். குதிரை சவாரி செய்பவர்கள், ரேக்ளா வண்டிக்காரர்கள், குதிரை யேற்றப் பயிற்சி தருபவர்கள் எல்லாம் விரும்புவது இந்த வகை சேணங்களைத்தான். இதில் ஜம்பிங் சேடில், ஆல்பர்பஸ் சேடில், கெளபாய் சேடில், மிலிட்டிரி சேடில் உள்ளிட்ட 16 வகை சேடில்கள் உள்ளன.

இப்போதெல்லாம் ஜாதக ரீதியான பலனுக்கு, குதிரையேற்ற பயிற்சி தரவும் குதிரை வாங்கவும் விரும்புகிறார்கள். கோவையில் சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் குதிரைகளும், தமிழகம் முழுக்க சுமார் 50 ஆயிரம் குதிரைகளும் உள்ளன. குதிரைகள் வைத்திருப்பவர்கள் எல்லாம் என்னிடமே குதிரைக்கான உபகரணங்களை வாங்க வருகிறார்கள். இதை நான் லாப நோக்கத்துக்காக விற்கவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x