Published : 07 Apr 2017 10:43 AM
Last Updated : 07 Apr 2017 10:43 AM
தமிழர்களின் பாரம்பரிய விளையாட் டான ஜல்லிக்கட்டை பண்டைய வழக்கப்படியும் உலகத் தரத்திலும் நடத்தி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் திருக் கோஷ்டியூர் அருகே உள்ளது எம்.புதூர். இங்குள்ள கண்டி கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மஞ்சு விரட்டு களைகட்டும். 2014-க்கு பிறகு இங்கேயும் ஜல்லிக்கட்டு வழக்கமான உற்சாகத்தை இழந்த நிலையில், இந்த ஆண்டு ஜல்லிக் கட்டுக்காக புதிய உத்வேகத்துடன் தயாராகிறது எம்.புதூர்.
ஏப்ரல் 16-ல் இங்கு நடத்தப் படும் ஜல்லிக்கட்டை உலக தரத் துக்கு உயர்த்தி கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடும் எம்.புதூர் மக்களுடன் தமிழர் வீர விளை யாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தினரும் கைகோர்த்திருக் கின்றனர். அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் டி.ஒண்டிராஜ், இணைச் செயலாளர் டி.ராஜேஷ் ஆகியோர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் குறித்து
‘தி இந்து’விடம் கூறியதாவது: ‘‘எம்.புதூரில் 2007-லிருந்து ‘ஜில் லுன்னு ஒரு ஜல்லிக்கட்டு’ என்ற பெயரில் வித்தியாசமாக ஜல்லிக் கட்டை நடத்த ஆரம்பித்தோம். பெரும்பாலும் கிராமத்து மக் களும் விவசாயிகளும் கால்நடை கள், வயல், வீடு என ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சிக்கிக் கிடப்பார்கள்.
அவர்களுக்கு வெளிஉலகத் தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, ஜல்லிக்கட்டில் ஜெயித்த மாடு களின் உரிமையாளர்கள் 17 பேரை யும் மாடுபிடி வீரர்கள் 8 பேரையும் மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்று, நட்சத்திர ஓட்டலில் தங்க வைத் தோம். அவர்களுக்கு மெரினா பீச் உள்ளிட்ட இடங்களைச் சுற்றிக் காட்டிவிட்டு, மறுநாள் ஏ.சி. பஸ்ஸில் மதுரைக்கு அழைத்து வந்தோம். இவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னையையே பார்க்காதவர்கள்; அனைவருக்குமே முதலாவது விமான பயணம். அடுத்தடுத்து நான்கு ஆண்டுகள் இந்த அனு பவத்தைப் பாட்டாளிகளுக்குக் கொடுத்தோம்.
2011-லிருந்து ‘ஜில்லுன்னு ஒரு ஜல்லிக்கட்டை’ நடத்த முடிய வில்லை. தடைகள் தகர்ந்ததால் இந்த ஆண்டு ‘மெரினா கோப்பை’ போட்டியாக நடத்துகிறோம். இதற் காக எங்கள் கிராமத்தின் ஜல்லிக் கட்டுத் திடலில் கிரிக்கெட் ஸ்டேடி யம் போல் ஸ்பெஷல் கேலரி அமைக்கப்படுகிறது. அதற்குள் தான் போட்டி நடக்கும். ஜல்லிக்கட் டுக்காக போராடியவர்களுக்காக பார்வையாளர்கள் மாடத்தில் தனி இடம் ஒதுக்கப்படும்.
வி.ஐ.பி-க்கள் அமரும் பகுதி ராஜதர்பார் போல் அமைக்கப்பட்டு, மேல்பகுதியில் சேர, சோழ, பாண் டியர்களின் கொடிகள் பறக்கவிடப் படும். நமது பழைய கலாச்சாரத்தை நினைவூட்டும் வகையில் கேலரி அமைப்பு இருக்கும். மாடுபிடி வீரர்களும் சேரா, சோழா, பாண்டியா என மூன்று அணிகளாக பிரிக்கப்படுவார்கள். இவர்கள் பாரம்பரிய வழக்கப்படி தார்ப்பாச்சி கட்டி, பனியன் (இதில் அந்தந்த நாட்டின் கொடியும் சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும்) அணிந்து, தலைப்பாகை கட்டி இருப்பார்கள்.
ஒவ்வொரு நாட்டு அணியும் இரண்டு மணி நேரமே திடலுக்குள் நிற்கலாம். மொத்தத்தில் 6 மணி நேரத்துக்குள்ளாக ஜல்லிக்கட்டே முடிந்துவிடும்.
ஜல்லிக்கட்டுக்கு அதிகபட்சம் 600 மாடுகள் வரும். அதிகமான மாடுகளைக் குறைவான நேரத்துக் குள் திறந்து விளையாட விடுவது, ஜல்லிக்கட்டை பாரம்பரிய முறைப் படி நடத்துவது - இவ்விரண்டு அம்சங்களையும் கின்னஸ் சாத னைக்காக பதிவு செய்திருக்கிறோம். இதை நேரில் பார்த்து பதிவு செய் வதற்காக கின்னஸ் பிரதிநிதிகள் 3 பேர் இங்கு வரவிருக்கிறார்கள்.
எங்கள் சங்கத்தின் கவுரவ தலைவரான இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமானும் ஜல்லிக் கட்டில் கலந்து கொள்கிறார். உலகெங்கும் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கலந்துகொள்ள வேண்டும் என தூதரகங்கள் வாயி லாக அழைப்பு அனுப்பி இருக்கி றார் அமைச்சர். ஜல்லிக்கட்டில் வெற்றிபெறும் மாடுகளுக்கும் வீரர் களுக்கும் கார், பைக், ஏ.சி. ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், லேப்டாப் உள்ளிட்ட 13 வகையான பரிசுகள் வழங்கப்படும். அதிகப்படியான மாடுகளைப் பிடிக்கும் வீரருக்கும் பார்வையாளர்களை பரவசப்படுத் தும் ஒரு மாட்டுக்கும் ‘மெரினா கோப்பை’ வழங்கப்படும். ஜல்லிக் கட்டுக்காக போராடியவர்களைக் கவுரவிக்கும் வகையில் இந்தக் கோப்பை வழங்கப்படுகிறது’’ என்றனர்.
இதேபோல், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் களைக் கவுரவிக்கும் விதமாக, பிள்ளையார்பட்டி அருகிலுள்ள சிராவயலில் ஏப்.30-ல் சிறப்பு மஞ்சு விரட்டும் நடத்தப்படவுள்ளது.
எம்.புதூர் கிராமத்தின் ஜல்லிக்கட்டுத் திடலில் கிரிக்கெட் ஸ்டேடியம்போல் அமைய உள்ள ஸ்பெஷல் கேலரி மற்றும் பார்வையாளர்கள் மாடத்தின் மாதிரி வரைபடம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT