Published : 22 Apr 2014 08:21 AM
Last Updated : 22 Apr 2014 08:21 AM
மத்திய சென்னை தொகுதியில் திமுக அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறத் துடிக்கிறார் தயாநிதிமாறன். ஜெயலலிதாவின் சாதனைகளைச் சொல்லி வாக்குகளை அள்ள முயல்கிறார் அதிமுக வேட்பாளர் விஜயகுமார்.
மக்களவைத் தேர்தலில் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள தொகுதிகளில் மத்திய சென்னை யும் ஒன்று. கடந்த 2 தேர்தல்களி லும் இங்கு வெற்றி பெற்ற முன் னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை மீண்டும் களமிறக்கியுள் ளது திமுக. அவரும் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தயாநிதிமாறனின் சித்தி செல்வி, மனைவி பிரியா உள்பட கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த பல பெண்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது, தொகுதிப் பொறுப்பை சேகர்பாபுவிடம் கொடுத்திருப்பது, கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இருப்பது போன்றவை மாறனுக்கு பலம். தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர் என்ற முறையில் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
ஆளுங்கட்சிக்கு பெரியளவில் எதிர்ப்பு இல்லாததும், மற்ற மாவட் டங்களைப் போல மின்தட்டுப்பாடு, குடிநீர் பற்றாக்குறை இல்லாத தும் அதிமுக வேட்பாளர் விஜயகுமாருக்கு பலம்.
தொகுதியில் வசிக்கும் பெரும் பாலானோருக்கு மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி போன்ற இலவச பொருட்கள் கிடைத்திருப்பதால் இல்லத்தரசிகளின் வாக்கு எங்களுக்கு எளிதாக கிடைக்கும் என்கின்றனர் அதிமுகவினர். அம்மா உணவகம், சிறிய பஸ் போன்ற திட்டங்களும் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளன.
தேமுதிக வேட்பாளர் ஜெ.கே.ரவீந்திரன் சற்று வித்தியாசமாக ‘கொரில்லா போர்’ முறையில் மாற்றுக் கட்சி வேட்பாளர்களை மறைமுகமாகத் தாக்குவதற்கு முயற்சிக்கிறார். படித்தவர்கள் அதிகமாக இருப்ப தால் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் வாக்கு சேகரிக்கிறார். ‘நமோ’ என்ற மந்திரச் சொல் தங்களுக்கு நிச்சயம் வெற்றி தேடித்தரும் என்பது தேமுதிகவினரின் நம் பிக்கை. இவர்களோடு காங்கிரஸ் வேட்பாளர் மெய்யப்பனும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பிரபாகர னும் களத்தில் இருக்கின்றனர்.
இந்தத் தொகுதியில் சுமார் 3 லட்சம் முஸ்லிம் வாக்குகள் உள்ளன. இதை சிந்தாமல், சிதறாமல் அள்ள திமுகவும் அதிமுகம் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றன. தொகுதியில் 5 முனைப் போட்டி என்றாலும் திமுக அதிமுக இடையேதான் கடும் போட்டி. அதிமுக வேட்பாளருக்கு அண்ணாநகர், எழும்பூர், துறைமுகம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளிலும், திமுக வேட்பாளருக்கு வில்லிவாக்கம், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 3 சட்டசபை தொகுதிகளிலும் செல் வாக்கு இருப்பதால் இருவரும் சமபலத்துடன் உள்ளனர். இருவ ரில் ஒருவர்தான் வெற்றிக் கனியைப் பறிப்பர் என்கிறது அரசியல் பார்வையாளர்களின் ஆரூடம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT