Published : 07 Sep 2016 10:13 AM
Last Updated : 07 Sep 2016 10:13 AM

பார்வையாளர்களை ஈர்க்கும் வேப்பமர பூங்கா: முன்மாதிரியாகத் திகழும் மதுரை வேளாண் கல்லூரி

தமிழகத்தில் இரண்டரை லட்சம் வேப்ப மரங்கள் இருப்பதாக வேளாண் துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஆனாலும், தேவையைவிட மிகக் குறை வாகவே வேப்ப மரங்கள் இருக்கின்றன. புதிய மரக்கன்றுகளை நட்டு, பெரிய மரங்களாக வளர்க்கும் ஆர்வம் இளைய தலைமுறையினரிடம் குறைவாக இருக்கிறது. இவர்களுக்கு முன் மாதிரியாக மதுரை வேளாண்மை கல்லூரி மாணவர்கள் திகழ்கின்றனர்.

மதுரை வேளாண்மை பல் கலைக்கழக கல்லூரி வளாகத் தில் 2,000-க்கும் மேற்பட்ட வேப்ப மரங்கள் உள்ளன. இந்த மரங்களை அடையாளப்படுத்த வும், அதன் பாரம்பரிய பெருமை கள் குறித்து அடுத்தடுத்த தலைமுறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கடந்த பல ஆண்டுகளாக தமிழ கத்தின் பல இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பல வகையான வேப்பமரங்களை கல்லூரியின் ஆரம்பகால மாணவர்கள் நட்டு மரங்களாக்கி உள்ளனர்.

தற்போது, அந்த மரங்களை உள்ளடக்கிய பகுதியை வேப்பமர பூங்காவாக உருவாக்கி மாணவர்கள் பராமரிக்கின்றனர். அதனால், தமிழகத்தில் அதிக அளவு வெப்பநிலை பதிவாகும் நகரமாக மதுரை இருந்தாலும், மதுரை வேளாண் கல்லூரி வளாகத்தில் மட்டும் ஆண்டு முழுவதும் குளுமையான சூழல் நிலவி வருகிறது. இந்த வேப்பமர பூங்காவும், அங்கு நிலவும் குளிர்ச்சியான சூழலும் கல்லூரிக்கு வரும் விவசாயிகள், பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. இந்த வேப்பமர பூங்காவில் திறந்த வயல்வெளி பயிலரங்குகள், கருத்தரங்குகள், விருந்தினர்களைக் கவுரவிக் கும் நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படு கின்றன.

இதுகுறித்து கல்லூரி பூச்சியியல் துறை பேராசிரியர் மா.கல்யாணசுந்தரம் கூறியதாவது: மரங்களில், வேப்பமரம் கற்பக விருட்சமாகக் கருதப்படு கிறது. வேப்பமரத்தின், அனைத் துப் பாகங்களும் பயன்படுகின் றன. தீக்குச்சி, பற்பசை, சோப்பு, பூச்சிக் கொல்லி மருந்துகள், வேப்ப எண்ணெய், புண்ணாக்கு போன்றவை தயாரிக்க பயன் படுகிறது.

வேப்ப மரத்தில் இருந்து செய்யப்படும் ஜன்னல், கதவு களுக்கு மக்களிடம் வரவேற்பு இருக்கிறது. கரையான்கள் அரிக்காது. வேப்ப முத்துக்கு நல்ல விலை கிடைக்கிறது. வேப்பமரத்தின் ஒரு சதுர அடி மரக்கட்டை மதிப்பு அதிகம். 20, 25 ஆண்டுகள் வரை இருக்கும் ஒரு நல்ல வேப்ப மரம் ஆண்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வருமானத்தை தரக்கூடியது என்றார்.

வெயில் காலத்திலும் தளிர் விடும் தன்மை

பேராசிரியர் மா.கல்யாண சுந்தரம் மேலும் கூறும்போது, “பள்ளி, கல்லூரி, சாலைகளில் வேப்ப மரங்களை அதிக அளவு நட வேண்டும். இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு வேப்ப மரங்கள், சிறந்த வாகனக் காப்பானாக திகழ்கின்றன. வேப்பமரங்கள், வெயில் காலத்தில் புதிய தளிர் விடும். வேற எந்த மரங்களுக்கும் இந்த தனித்தன்மை கிடையாது.

செடியாக இருக்கும் ஆரம்ப காலத்தில் மட்டுமே இந்த மரத்துக்கு தண்ணீர் தேவை. அதன் பின்னர் தண்ணீர் தேவையில்லை. பெரிய வறட்சியைக்கூட எளிதாக தாங்கும். இன்றைக்கும் கிராமங்களில் அம்மை உள்ளிட்ட கொடிய வைரஸ் நோய்களுக்கு வேப்பஇலையை அரைத்து போடுவது ஒரு பழக்கமாக இருக்கிறது. உலகம் முழுவதும் வேப்பரம் இருந்தாலும், தமிழகத்தில் காணப்படும் வேப்பமரத்தில் மட்டுமே பூச்சிக்கொல்லி மருந்து அதிகம் இருப்பது பெரிய விசேஷம். இதை மாணவர்களுக்கு புரிய வைக்கவே, வேப்பமர பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

வேப்ப மரத்தில் இருந்து செய்யப்படும் ஜன்னல், கதவு களுக்கு மக்களிடம் வரவேற்பு இருக்கிறது. கரையான்கள் அரிக்காது. வேப்ப முத்துக்கு நல்ல விலை கிடைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x