Published : 20 Feb 2017 07:56 AM
Last Updated : 20 Feb 2017 07:56 AM
வெள்ளம், ஆக்கிரமிப்பு, பெண் களின் பாதுகாப்பு, தேர்தல் என பல்வேறு ஆபத்தான காலகட்டங் களில் மக்களின் நீதிபதியாக பணியாற்றியவர் நீதிபதி எஸ்.கே.கவுல் என முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.கே.கவுல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ல் அவர் தலைமை நீதிபதியாக பதவி வகித்தபோது நிலைமை படுமோசமாக இருந்தது. அந்த நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றி, உயர் நீதி மன்றம் என்றால் எப்படி இருக்க வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்று செயல்படுத்திக் காட்டிய பெருமை எஸ்.கே.கவு லையே சாரும்.
தனது இரண்டரை ஆண்டு பத விக் காலத்தில் பொதுநலன், சமூக நலனோடு பல்வேறு தீர்ப்புகளை வழங்கியிருந்தாலும் கட்டாய தலைக்கவசத்துக்கு எதிராக மதுரை வழக்கறிஞர்கள் விடாப்பிடியாக போராடிய போதும் அதற்கு முற்றுப் புள்ளி வைத்தவர் எஸ்.கே.கவுல்.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சிஐஎஸ்எப் போலீஸ் பாதுகாப்பு, சென்னையில் 2015 இறுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது தாமாகவே வழக் குப்பதிவு செய்து அரசின் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தியது, டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களின் நியமனத்தை அதிரடியாக ரத்து செய்தது, சுவாதி கொலை வழக்கில் தாமாக வழக்குப்பதிவு செய்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ரயில் நிலையங்கள்தோறும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிட்டது, நீதி மன்றங்களின் உள்ளே மற்றும் வெளி வராண்டாக்களில் கண் காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிட்டது, வழக்கறிஞர்களின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது, அரசு வழக்கறிஞர் களாக நியமிக்கப்படுபவர்களின் தகுதியை நிர்ணயிப்பது என பல்வேறு உத்தரவுகளைத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பிறப்பித்து இருந்தாலும், விளை நிலங்களை அங்கீகாரமற்ற வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு அவர் விதித்த தடை மூலம் தமிழகத்தில் எண்ணற்ற விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
நீதிபதி எஸ்.கே.கவுலின் செயல் பாடுகள் குறித்து முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞரும், மூத்த வழக்கறிஞருமான ஆர்.கிருஷ்ண மூர்த்தி ‘தி இந்து’விடம் கூறும் போது, ‘‘எஸ்.கே.கவுல் இரண் டரை ஆண்டுகாலம் பல்வேறு முன்மாதிரி தீர்ப்புகளைக் கூறியுள் ளார். நீதித்துறைக்கும், பொது மக்களுக்கும், வழக்கறிஞர்களுக் கும் பாலமாக இருந்து சிறப் பான நிர்வாகத்தை வெளிப்படுத்தி யுள்ளார். அவரைப் போல ஒருவர் தான் மீண்டும் தலைமை நீதிபதி யாக வரவேண்டுமென்பது எங்க ளைப் போன்றவர்களின் விருப்பம். சிஐஎஸ்எப் போலீஸ் பாதுகாப்பு உயர் நீதிமன்றம் எப்படி கட்டுக் கோப்புடன் செயல்பட வேண்டும் என்பதைக் காட்டியுள்ளது.
அரசாங்கத்தின் தவற்றையும் சுட்டிக்காட்ட அவர் ஒருபோதும் தயங்கியது இல்லை. குறிப்பாக முத்திரைத்தாள் கட்டணம், உயிலுக் கான புரோபேட் கட்டணத்தை வெகுவாக குறைக்கச் செய்தது. நீதித்துறைக்கான நிதியை அரசிட மிருந்து கேட்டுப் பெற்றது. அரசு வழக்கறிஞர்களின் தகுதியை நிர்ணயம் செய்தது என பொதுநலன் சார்ந்த தலைமை நீதிபதியாக அவர் பணியை செவ்வனே செய்துள்ளார்’’ என்றார்.
முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞரும், மூத்த வழக்கறி ஞருமான ஏ.எல்.சோமயாஜி குறிப்பிடும்போது, ‘‘உச்ச நீதிமன்ற நீதிபதியாகியுள்ள எஸ்.கே.கவுல் சென்னையில் சீனியர், ஜூனியர் என எந்த பாகுபாடும் பார்க்காதவர். அவர் உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதியாகச் செல்வது, தமிழகத் துக்கு இழப்புதான். யாருக்கும், எதற்கும் பயப்படாத தைரியசாலி. பொதுமக்கள், அரசாங்கம் என இரண்டையும் ஒரே தட்டில் வைத்து தீர்ப்பளித்தவர். அரசு வழக்கறி ஞர்கள் சட்ட அறிவுடன் திறமைசாலி களாக இருக்க வேண்டும் என எண்ணியவர். சட்டத்தில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் நன்கு கற்றறிந்தவர். குறிப்பாக வணிக பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளில் சிறப்பான தீர்ப்பை அளித்தவர்.
மாதொருபாகன் நாவல் மூலம் எழுத்து மற்றும் கருத்து சுதந்தி ரத்தை யாரும் தடுக்க முடியாது என பகிரங்கப்படுத்தியவர். உயர் நீதி மன்றத்தின் நிலுவை வழக்குகளை வெகுவாக குறைத்தவர். வெள் ளம், நீர்நிலை ஆக்கிரமிப்பு, பெண்களின் பாதுகாப்பு, தேர்தல் என பல்வேறு ஆபத்தான கால கட்டங்களில் மக்களின் நீதிபதி யாக பணியாற்றியவர். இவரது பணிக்காலத்தில்தான் உயர் நீதி மன்றத்தில் அதிக நீதிபதிகள் பணியாற்றி உள்ளனர் என்ப தும், நீதிபதிகளிடையே ஆரோக் கியமான போட்டி நிலவியது என்பதும் கூடுதல் சிறப்பு’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT