Published : 08 Feb 2017 08:39 AM
Last Updated : 08 Feb 2017 08:39 AM
தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் அதிகாரி களின் துணையுடன் கருவேல மரங்கள் வளர்க்கப்படுவது வழக்கறிஞர்கள் ஆணையர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மதுரை, திருச்சி, நெல்லை உட்பட 13 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் இடங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை பிப். 10-ம் தேதிக்குள் வேரோடு அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 13 மாவட்டங்களிலும் கருவேல மரங்களை அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தப் பணியை, வழக்கறிஞர்கள் ஆணையர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். வழக்கறிஞர்கள் ஆணையர்கள் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி யான தகவல் வெளிவந்துள்ளது.
விருதுநகர், சிவகங்கை, ராம நாதபுரம், திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் கருவேல மரம் வளர்ப்பு ஒரு தொழிலாகவே நடை பெறுகிறது. அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளில் வளர்க்கப்படும் இந்த கருவேல மரங்களின் உண் மையான மதிப்பு ரூ.15 லட்சமாக இருக்கும்.
ஆனால், மொத்த மரத்தின் மதிப்பும் ரூ.50 ஆயிரம் என குறிப்பிட்டு அந்தப் பணம் கருவூலத்தில் செலுத்தப்படும். பின்னர் மரங்களை வெட்ட அனுமதி பெற்றவர் நீர்நிலை அமைந்திருக் கும் பகுதியைச் சேர்ந்த முக்கிய நபர்கள், அதிகாரிகளுக்கு குறிப் பிட்ட தொகையை வழங்கி, மரத் தின் தூரைத் தவிர மற்ற பகுதியை வெட்டி எடுத்துச் செல்கிறார். மூன்று ஆண்டுக்கு பிறகு கருவேல மரங்கள் நன்கு வளர்ந்த பின் மீண் டும் வெட்டப்படுகிறது. மரங்கள் வெட்டப்பட்ட பிறகு நீர்நிலையை மராமத்து பார்த்ததாக தனி கணக்கு எழுதி அரசிடம் பணம் பெறுவதும் நடைபெறுகிறது. இந்த நடைமுறை காலம் காலமாக பின்பற்றப்படு கிறது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவால், கருவேல மரங்களை உடனடியாக அகற்றும் சூழலுக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். வளர்த்து அறுவடை செய்ய வேண் டிய நேரத்தில் உயர் நீதிமன்றத்தால் உடனடியாக எடுக்க வேண்டிய சூழல் வந்துள்ளதால், அதை தவிர்க்க ஏதாவது காரணத்தை கூறி நாட்களை தள்ளிப்போட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் ஆணையர் ஒருவர் கூறும்போது, “சீமைக் கருவேல மரம், விவசா யம், கால்நடை, நிலத்தடி நீர்மட்டத் துக்கு பேராபத்தை விளைவிக்கும் என தெரிந்தும், நீர்நிலைகளில் அதிகாரிகள் வளரவிட்டுள்ளனர். பின்னர் விற்க அனுமதி வழங்கி பணம் பார்த்துள்ளனர். உயர் நீதி மன்றம் உத்தரவிட்டும் அரசிடம் போதுமான நிதி இல்லை என்று கூறி கருவேல மரங்களை வெட்டு வதை அதிகாரிகள் தவிர்க்கின் றனர்” என்றார்.
பொதுப்பணித் துறை ஒப்பந்த காரர் ஒருவர் கூறும்போது, ‘‘கரு வேல மரங்களை வெட்டுவதற்கு அதிகாரிகள் வெளிப்படையாக டெண்டர் விடுவதில்லை. இதில் கூட்டுக் கொள்ளை நடைபெறு கிறது” என்றார்.
அடுப்புக் கரி தயாரிப்பு
கருவேல மரங்களில் இருந்து அடுப்புக் கரி தயாரிக்கப்பட்டு கோவை, திருப்பூர் மற்றும் வட மாநில தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுகிறது. ஒரு டன் அடுப்புக் கரி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ஒரு டன் கருவேல மரக்கட்டை ரூ.2,500-க்கு விற்கப்படுகிறது. கருவேல மர தூரின் விலை இன்னும் அதிகம். தற்போது அவசர கதியில் கருவேல மரங்கள் வெட்டப்படுவதால் டன்னுக்கு ரூ.200 வரை குறைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT