Published : 20 Jun 2015 07:59 AM
Last Updated : 20 Jun 2015 07:59 AM

எல்ஐசி அறக்கட்டளை சார்பில் ரூ.6.50 கோடி உதவி

எல்ஐசி இந்தியா நிறுவனத்தின் தென்மண்டலம் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளை உள்ளடக்கியதாக செயல்படுகிறது. இதன் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் ஓர் அங்கமாக 2006-ம் ஆண்டில் கோல்டன் ஜூபிளி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன்மூலம் வறுமையில் வாடு பவர்களுக்கு உயர்கல்வி, மருத்துவ உதவி, பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான உதவிகள் செய்ப்படுகின்றன.

இதுவரை இந்த அறக்கட்டளை மூலம் ரூ.6.50 கோடிக்கு உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

2014-15-ம் ஆண்டில் சென்னை அடையாறு புற்றுநோய் மையம், திருநெல்வேலி சோஷியல் சர்வீஸ் சொசைடி, முண்டகப்பாடம் மந்திரம், வி.ஹெச்.எஸ்.ரத்த வங்கி, கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம், சுஹம் டிரஸ்ட், சரணாலயம் டிரஸ்ட், சேவா பாரதி ஆகிய அமைப்பு களுக்கு மொத்தம் ரூ.99 லட்சம் வழங்கப்பட்டது.

2015-16-ல் கோட்டயத்தில் உள்ள அஷ்ரயா சாரிடபிள் டிரஸ்டுக்கு கட்டிடம் கட்ட ரூ.25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x