Published : 01 Apr 2014 10:55 AM
Last Updated : 01 Apr 2014 10:55 AM
மத்திய சென்னை தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஜெ.பிரபாகர் 22 நாள்கள் நடை பயணமாகச் சென்று தனது தொகுதியில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மாநில பிரச்சாரக் குழு ஒருங்கிணைப்பாளர் டேவிட் பருண் குமார், தன்னார்வத் தொண்டர் அனந்து ஆகியோர் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் திங்கள்கிழமை செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
ஊழல், மதவாதம், வறுமை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு எங்கள் கட்சி செயல் பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் எங்கள் கட்சி மக்களை மிக நெருக்கமாக அணுகி பேச வேண்டும் என்பதற் காக நடைபயணமாகச் சென்று பிரச்சாரம் செய்வது என்று தீர்மானித்துள்ளோம்.
வேட்பு மனுவை செவ்வாய்க் கிழமை தாக்கல் செய்கிறோம். அதன் பிறகு அதே இடத்தில் வேட்பாளர் பிரபாகரின் நடை பயண பிரச்சாரம் தொடங் குகிறது. எங்கள் பிரச்சாரத்துக்கு வாகனங்களை அறவே பயன்படுத்த மாட் டோம். ஒவ்வொரு நாளும் குறைந்தபட் சம் 10 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று மக்களிடையே பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். ஏப்ரல் 1-ம் தேதி நடைபயணம் தொடங்கும் வேட்பாளர் பிரபாகர், 22-ம் தேதி மாலை தேர்தல் பிரச்சாரம் முடிந்த பிறகுதான் தனது வீட்டுக்குச் செல்வார். மக்கள் தரும் உணவை அருந்திவிட்டு, இரவில் மக்கள் அளிக்கும் இடத்திலேயே உறங்குவோம். இந்தப் பிரச்சாரத்தின்போது தொகுதியின் 15 லட்சம் வாக்காளர்களில் மிகப் பெரும்பாலானவர்களை நேரில் சந்தித்து எங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வேட்பாளர் ஜெ.பிரபாகர் கூறும்போது, “தொகுதி மேம் பாட்டு நிதியில் மேற்கொள் ளக் கூடிய பணிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எங்கள் பிரச்சாரம் இருக்கும். மேலும், அந்தந்த பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணி கள் குறித்து மக்கள் அளிக்கும் தகவல்களையும் சேகரிக்க உள்ளோம். மாற்று அரசியலுக் கான எங்கள் நடைபயணப் பிரச்சாரம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்’’ என்றார்.
மக்கள் தரும் உணவை அருந்திவிட்டு, இரவில் மக்கள் அளிக்கும் இடத்திலேயே உறங்குவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT