Published : 12 Jan 2017 10:18 AM
Last Updated : 12 Jan 2017 10:18 AM
மின்வாரிய பணிகளை டெண்டர் எடுப்பதற்காக ‘இ-டெண்டர்’ முறையை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் 20-ம் தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், டெண்டர் நடைமுறைகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) மற்றும் தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் (டான்டிரான்ஸ்கோ) நிறுவனங் கள் உற்பத்தி செய்யப்படும் மின் சாரத்தை பகிர்ந்தளித்தல் மற்றும் மின்விநியோகத்துக்கு தேவை யான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை செய்து வருகின்றன. இப்பணிகளை தனியார் நிறுவனங் கள் டெண்டர் எடுத்து செய்து தருகின்றன. இந்நிலையில், இந்த டெண்டர்களை ஆன்லைன் மூலம் எடுப்பதற்காக இ-டெண்டர் முறையை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தமிழகத்தைச் சேர்ந்த பொதுத் துறை நிறுவனங்கள் தற்போது டெண்டர்களை ஆன் லைன் மூலம் விடுவதற்காக இ-டெண்டர் முறையை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது டான்ஜெட்கோ மற்றும் டான்டி ரான்ஸ்கோ நிறுவனங்களின் பணிகளை டெண்டர் எடுப்பதற் காக இ-டெண்டர் முறை அறி முகப்படுத்த முடிவு செய்யப்பட் டுள்ளது. இப்புதிய திட்டம் வரும் 20-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எம்.எஸ்.டி.சி. என்ற நிறுவனம் இந்த இணையதள டெண்டர் சேவையை வழங்க உள்ளது. இதன்படி, டெண்டர் கோரி விண்ணப்பிப்பவர்கள் இந்த இணையதளத்தில் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு உருவாக்கி கட்டணமின்றி இலவசமாக பதிவு செய்துகொள்ளலாம்.
இந்த சேவையை வழங்கு வதற்காக சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான டெண்டர்களுக்கு 0.5 சதவீதம் தொகையை சேவைக் கட்டணமாக எம்.எஸ்.டி.சி. நிறுவனத்துக்கு வழங்கப்படும். இந்த இ-டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் தங்களது முன் வைப்புத் தொகையை ஆர்டிஜிஎஸ் அல்லது என்இஎப்டி மூலம் செலுத்தலாம். டெண்டர் விண்ணப்ப படிவங்களை பிடிஎப் முறையில் ஸ்கேன் செய்து அனுப்பி வைக்கலாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT