Published : 14 Jun 2017 08:50 AM
Last Updated : 14 Jun 2017 08:50 AM
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத் துக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து மருத் துவமனை கட்டிடத்தை ரூ.31.65 கோடியில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பொது மருத்துவம், குணபாடம், சிறப்பு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம் உட்பட 7 துறைகளும் மற்றும் அதற்கான 9 புறநோயாளிகள் பிரிவும் செயல் படுகிறது. காய்ச்சல், தலைவலி, மஞ்சள் காமாலை தொடங்கி அனைத்து விதமான நோய்களுக் கும் இங்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது. இவை தவிர, பல் மருத்து வம், கண் மருத்துவம் மற்றும் வாரத்தில் ஒருநாள் முதியோர் மருத்துவப் பிரிவும் செயல்படுகிறது. இங்கு வழங்கப்படும் சிகிச்சை களுக்கு மக்களிடையே நல்ல வர வேற்பு உள்ளதால் புதிய சேவை கள் தொடங்கப்பட்டுள்ளன.
2007-ம் ஆண்டு தேசிய சித்த மருத்துவ கட்டிட விரிவாக்கப் பணிக்கு ரூ.18 கோடி ஒதுக்கப்பட் டது. ஆனால் மருத்துவமனை இருக்கும் இடம் தொல்லியல் துறை யின் கட்டுப்பாட்டில் இருந்ததால் இதற்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அனு மதி கிடைத்துள்ளதால் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.31.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய பொதுப்பணித் துறையிடம் இப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. தொல்லியல் துறை சார்பில் தடை விதிக்கப்பட்ட பகுதி யில் மருத்துவமனை கட்ட அனுமதி வழங்கியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தேசிய சித்த மருத்துவ நிறுவனத் தின் இயக்குநர் மருத்துவர் பானுமதி தெரிவித்தனர்.
தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 7 லட்சம் பேர் புறநோயாளிகளாகவும், உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற் றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக் கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT