Published : 14 Mar 2014 10:22 AM
Last Updated : 14 Mar 2014 10:22 AM
மதுரை நெல்பேட்டையில் உள்ள சுங்கம் பள்ளிவாசல் முன் குண்டு வெடித்தது. இதில் ஜமாத் செயலாளரின் மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது.
மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் காஜாமொய்தீன் (40). இவர் மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் செயலாளராகவும், சுங்கம் பள்ளிவாசல் ஜமாத் செயலாளராகவும் உள்ளார்.
இவரது வீட்டுக்குச் செல்லும் வழியில் பாதாளச் சாக்கடைப் பணிகள் நடைபெறுவதால், இரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளை, பள்ளிவாசல் அருகேயுள்ள சகோதரர் சிக்கந்தர் வீட்டின் முன் நிறுத்தி வந்தார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 5.10 மணி அளவில் மோட்டார் சைக்கிள் அருகே வெடிகுண்டு வெடித்து சிதறிக் கிடந்தது. மாநகர துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா மற்றும் போலீஸார் வந்து சோதனை செய்தனர்.
அதன்பின் அவர்கள் கூறுகை யில், ‘பொட்டாசியம் நைட்ரேட் பயன்படுத்தி இந்த வெடிகுண்டை தயாரித்துள்ளனர்.
குண்டு வெடித் ததும், மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரியும் வகையில் பெட்ரோல் டேங்க் கீழேயுள்ள டூல்ஸ் பாக்ஸிற்குள் வெடிகுண்டை வைத்துள்ளனர். வீரியம் குறைவாக இருந்ததால் பெரும் சேதம் ஏற்படவில்லை’என்றனர்.
துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா கூறுகையில், ‘சுங்கம் பள்ளிவாசலில் கேமரா பொருத்தியது தொடர்பாக தற்போது பதவியில் இருப்பவர் களுக்கும், இப்பகுதியைச் சேர்ந்த வேறு சிலருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த முன்விரோதத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’ என்றார்.
இப்பள்ளிவாசல் ஜமாத்தின் துணைத் தலைவராக உள்ள வழக்கறிஞர் அக்பர் அலியின் காரில் 20.11.2013 அன்று வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கு உட்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஒரு குற்றவாளிகள்கூட இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT