Published : 11 Mar 2017 09:58 AM
Last Updated : 11 Mar 2017 09:58 AM

100 ஆண்டில் இல்லாத அளவு வறட்சி: நீரின்றி பாறைகளாக காட்சி தரும் ஒகேனக்கல் - குடிநீர் திட்ட செயல்பாடும் முடங்கும் அபாயம்

தருமபுரியில் இருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள் ளது ஒகேனக்கல். காவிரி ஆற்றின் மறுகரையில் கர்நாடக மாநில எல்லை தொடங்குகிறது. ஒகேனக் கல் அருவியில் இதுவரை வெள் ளப்பெருக்கு ஏற்பட்டுத்தான் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாறாக, அருவி வறண்டு குளிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கடந்த 100 ஆண்டு வரலாற்றில் பதிவு இல்லை. ஆனால், நடப்பு ஆண்டில் இன்னும் ஓரிரு நாட்களில் அருவி முழுமையாக வறண்டுவிடக் கூடும் என்ற நிலை நிலவுகிறது.

கர்நாடக மாநிலத்தில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து ஆடி மாதம் தொடங்கி, ஓரிரு மாதங் கள் வரை ஒகேனக்கல் காவிரி யாற்றில் இரு கரைகளையும் தொட் டுக்கொண்டு வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடும். விநாடிக்கு 1 லட்சம் கன அடியை கடந்து வெள்ளம் புரண்ட பதிவுகளெல்லாம் உள்ளது. இந்த காலங்களில் ஆற்று நீரின் நடுவே ஆங்காங்கே அரிதாக பாறைகளின் முனைகளை பார்க்க முடியும். வெள் ளம் வடியும் கோடை காலங்களில் கூட விநாடிக்கு சுமார் 500 கன அடிக்கு கீழே நீர் வரத்து சரிந்த தாக தெரியவில்லை. தற்போதோ, விநாடிக்கு வெறும் 20 கன அடிக் கும் குறைவாகவே தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால், திரும்பிய திசையெங்கும் பாறை களை மட்டுமே ஒகேனக்கல்லில் காண முடிகிறது. இவற்றின் நடுவே சிறுத்துப் போன சிற்றோடையாய் காவிரி ஆறு காட்சியளிக்கிறது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட் டங்களின் பெரும்பாலான பகுதி களில் நிலத்தடி நீரில் புளூரைடு எனும் வேதிப்பொருள் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் இந்த மாவட்ட மக்கள் பல்வேறு உடல் பாதிப்புகளுக்கும் ஆளாகி வந்தனர். இதற்கு விடுதலையளிக்கும் விதமாக, ஜப்பான் நாட்டின் 2,000 கோடி ரூபாய் நிதியுதவியுடன் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 2012-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இரு மாவட் டங்களுக்கும் 100 சதவீத அளவில் இந்த குடிநீர்த் திட்டம் சென்று சேரவில்லை என்றாலும், 50 சதவீதத்தை கடந்து ஒகேனக்கல் குடிநீர் திட்டம் செயல்பட்டு வந்தது. ஆனால், அதற்கும் தற்போது பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.

விநாடிக்கு சுமார் 100 கன அடி வீதம் ஆற்றில் நீர்வரத்து இருந்தால்தான் ஒகேனக்கல் குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் அதன் இயல்பில் செயல்படும். தற்போது விநாடிக்கு 20 கன அடி என்னும் நிலைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. எனவே, நீரேற்று நிலைய பகுதிக்கு தண்ணீர் வந்து சேரும் வகையில் ஆங்காங்கே மணல் மூட்டைகளைக்கொண்டு தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள். இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில் காரணமாக ஆற்றில் வழிந்தோடி வரும் சிறி தளவு நீரும் ஆங்காங்கே குட்டைகளில் மட்டுமே தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டால், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட இயந்திரங்கள் மவுனமாகி விடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x