Last Updated : 23 Aug, 2016 09:07 AM

 

Published : 23 Aug 2016 09:07 AM
Last Updated : 23 Aug 2016 09:07 AM

தமிழ் திரையுலகம் கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்: திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் வேண்டுகோள்

செவாலியே விருது பெரும் கமல் ஹாசனுக்கு தமிழ்த் திரையுலகம் பாராட்டு விழா நடத்த வேண்டும் என திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில், ‘தி இந்து’வுக்கு நேற்று அவர் அளித்த பேட்டி:

கலை இலக்கியத் துறையில் தொடர்ந்து பணியாற்றுபவர் களுக்கு பிரான்ஸ் நாட்டின் அரசு செவாலியே விருது வழங்கி வருகிறது. அந்த விருது இந்தாண்டு கமல்ஹாசனுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து பெருமைப்படுகிறேன்.

களத்தூர் கண்ணம்மா படத் தில் குழந்தை நட்சத்திரமாக, “அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே…” என்ற பாடலை பாடிக் கொண்டு கமல்ஹாசன் அறிமுக மானார். விளையும் பயிர் முளையி லேயே தெரியும் என்பதுபோல கமல்ஹாசன் பெரிய ஆளாக வருவார் என்று அன்றே எல்லோரும் சொன்னோம். அதேபோல இன்றைக்கு உலகநாயகனாக வந்துள்ளார்.கமலை வைத்து நான் 10 படங்களை இயக்கி உள்ளேன்.

கமல்ஹாசன் சகலகலா வல்லவன் என்பதை நிரூபிக்கும் விதமாகவே எடுக்கப்பட்ட படம் தான் சகலகலா வல்லன். அந்தப் படத்தில் வரும் ‘ஹாப்பி நியூ இயர்..’ என்ற பாடல்தான் எல்லா ஆண்டும் புத்தாண்டை வரவேற்கும் பாடலாக இன்றைக்கும் உள்ளது.

கமல்ஹாசன் சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த இயக்குநர், தயாரிப்பாளர் என எல்லாத் திரை நுட்பமும் கொண்ட தொழில்நுட்ப கலைஞர். அவருக்கு மக்கள் விரும்பும் படங்களை வியாபார ரீதியாக எடுப்பது பிடிப்பதில்லை. தான் எடுக்கும், நடிக்கும் படங் களில் புதுமைகளைப் புகுத்தி, அதை மக்கள் பார்க்க வர வேண் டும் என்பதே அவரது லட்சியம். அதற்காக கதையிலும், கதாபாத் திரத்திலும், ஒப்பனையிலும் புதுமை யான தொழில்நுட்பங்களை அதிக சிரமம் எடுத்துக்கொண்டு முழு ஈடுபாட்டுடன் செய்வார். அதனால் தான் கமல்ஹாசன் திரையுலகத்தின் விஞ்ஞானியாக உள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் அரசு கமல்ஹாசனுக்கு செவாலியே விருது அறிவித்ததற்காக, அந் நாட்டு அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்குப் பிறகு கமலஹாசன் பெறுகிறார். அப்போது, சிவாஜிகணேசனுக்குத் தமிழ்த் திரையுலம் பாராட்டு விழா நடத்தியது. அதேபோல, தற்போது கமல்ஹாசனுக்கும் தமிழ்த் திரையுலகம் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது என் விருப்பம். இந்த விருதைப் பெறும் கமல்ஹாசன் மேலும் பல விருதுகள் என வாழ்த்துகிறேன் என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x