Published : 27 Nov 2014 08:31 AM
Last Updated : 27 Nov 2014 08:31 AM

வங்கிக் கணக்கு இல்லாவிட்டால் காஸ் மானியம் ரத்தாகும் அபாயம்

வங்கிக் கணக்கு இல்லாத நுகர்வோர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு சமையல் காஸ் மானியத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமையல் எரிவாயுவுக்கு அரசு வழங்கி வரும் மானிய தொகையை நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவதற்காக ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தை கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்த முயற்சி செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு தரப்புகளில் இருந்து எழுந்த எதிர்ப்புகளின் காரணமாக இந்த திட்டம் அப்போது அமல்படுத் தப்படவில்லை.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத் தில் இதுகுறித்து கூறும்போது, “சமையல் எரிவாயுவுக்கான மானிய தொகையை பொது மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத் துவதன் மூலம் கள்ள சந்தையில் மானிய சிலிண்டர்கள் விற்பது தடுக் கப்படும். இந்த நேரடி மானிய திட்டம் முதல்கட்டமாக நாட்டின் 11 மாநிலங்களிலுள்ள 54 மாவட் டங்களில் இம்மாதம் 15-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் இது நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்படும்” என்றார்.

இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் கூறும்போது, “வரும் ஜனவரி மாதம் முதல் பொதுமக்கள் முழு மானிய தொகையான ரூ.863 கொடுத்து முதலில் காஸ் சிலிண்டரை வாங்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு சிலிண்டருக்கான மானியத் தொகையான ரூ.461-ஐ நுகர்வோரின் வங்கிக் கணக்கில் அரசு செலுத்தும். வங்கிக் கணக்கு எண் மற்றும் ஆதார் எண் இல்லாதவர்கள் வரும் ஜூன் மாதத்துக்குள் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு ஜூலை மாதத்திலிருந்து மானிய விலையில் காஸ் சிலிண்டர் கிடைக்காது” என்றார்.

திட்டம் சாத்தியமா?

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நகர்ப்புறத்தில் 68 சதவீதம் என்றும், கிராமப்புறங் களில் 54 சதவீதம் என்றும் 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக் கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதேசமயம் ரிசர்வ் வங்கியின் 2013-ம் ஆண்டு அறிக்கையில் கிராமப்புற பகுதிகளில் உள்ள 75 சதவீத விவசாய குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அனைவருக்கும் நேரடியாக காஸ் மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தி யம்தானா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.பி. கிருஷ்ணன், “காஸுக்கான நேரடி மானியம் பெறும் மக்கள் தங்களுடைய வங்கிக் கணக்கை பொதுத்துறை வங்கிகளில்தான் வைத்திருக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது.

ஆனால் 6 லட்சம் கிராமங்கள் உள்ள நமது நாட்டில் 30 ஆயிரம் பொதுத்துறை வங்கிக் கிளைகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் வங்கிக் கணக்கு மூலம் எரிவாயு மானியம் வழங்கும் திட்டம் மக்களுக்கு பயன்தருமா என்பது கேள்விக்குறியே” என்றார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் உ. வாசுகிக் கூறும்போது, “நேரடி மானிய திட்டம் பல சிக்கல்களை ஏற்படுத்தும். காஸுக்கான நேரடி மானிய திட்டம் தொடங்கப்பட்டால், வருங்காலத்தில் ரேஷன் பொருட் களுக்கான மானிய தொகையும் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் நிலை ஏற்படும். இது பெண்களையும், குழந்தைகளையும் தான் பெரிதும் பாதிக்கும்” என்றார்.

வில்லிவாக்கத்தை சேர்ந்த நுகர்வோர் சரஸ்வதி கூறுகையில், “பல குடும்பங்களில் காஸ் இணைப்பும், வங்கிக் கணக்கும் கணவரின் பெயரில்தான் உள்ளன.

இந்நிலையில் குடிகார கணவன் உள்ள குடும்பங்களில் அரசு வழங்கும் மானியம் மதுபான கடைக்கு போகவே அதிக வாய்ப்புள்ளது. இதனால் ஏழைக் குடும்பங்களின் பொருளாதாரச் சுமை மேலும் அதிகரிக்கக் கூடும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x