Published : 08 Aug 2016 10:07 AM
Last Updated : 08 Aug 2016 10:07 AM
ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து சென் னைக்கு தக்காளியின் வரத்து அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, அதன் விலை வீழ்ச்சி அடைந்துள் ளது. கோயம்பேடு மார்க்கெட் டில் ஒரு கிலோ தக்காளி ரூ.7-க் கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவின் ஒட்டுமொத்த தக்காளி உற்பத்தியில் 35 சதவீத உற்பத்தியுடன் ஆந்திர மாநிலம் முதலிடத்திலும், 10.44 சதவீத உற்பத்தியுடன் கர்நாடக மாநிலம் 2-வது இடத்திலும், 3.45 சதவீத உற்பத்தியுடன் தமிழகம் 9-வது இடத்திலும் உள்ளது. இதனால் தமிழகத்தின் தக்காளி தேவையை, ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களே பூர்த்தி செய்து வருகின்றன. அங்கு உற்பத்தி குறைந்தால், தமிழகத் தில் விலை உயர்வதும், அங்கு உற்பத்தி அதிகரிக்கும்போது தமிழகத்தில் விலை குறைவதும் வாடிக்கையாக உள்ளது.
தற்போது சென்னைக்கு தக்காளி வரத்து அதிகரித்திருப் பதைத் தொடர்ந்து, கோயம்பேடு மார்க்கெட்டில் அதன் விலை கிலோவுக்கு ரூ.7 ஆக குறைந்துள்ளது. பண்ணை பசுமை கடைகள், ஜாம்பஜார் மார்க்கெட், வியாசர்பாடி மார்க்கெட் போன்ற வற்றில் சில்லறை விற்பனையில் ரூ.10-க்கு விற்கப்படுகிறது. கடந்த ஆண்டும் இதே நாளில், கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை கிலோ ரூ.7 ஆக வீழ்ச்சி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கோயம் பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜனிடம் கேட்டபோ து, “கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் ஆந்திரம் மற்றும் கர் நாடக மாநிலங்க ளில் ஏற்பட்ட பரு வம் தவறிய மழை, விலை வீழ்ச்சி காரணமாக தக்காளி பயிரிடுவதை விவசாயிகள் தவிர்த்தது போன்ற காரணங்களால், அம்மாநிலங்களில் உற்பத்தி குறைந்தது. அதனால் தக்காளி விலை, சென்னை யில் முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த விற்பனையில் ரூ.80 வரையும், சில்லறை விற்பனையில் ரூ.100 வரையும் உயர்ந்தது. தற்போது வரத்து அதிகரிப்பால், தக்காளி விலை குறைந்துள்ளது. சில மாதங்களாக 32 லோடு தக்காளி மட்டுமே வந்துக்கொண்டிருந்தது. நேற்றைய நிலவரப்படி 80 லோடு தக்காளி கோயம்பேடு மார்க்கெட் டுக்கு வந்துள்ளது” என்றார்.
வியாசர்பாடி மார்க்கெட்டுக்கு வந்த வசந்தி என்ற பெண் இதுபற்றி கூறும்போது, “தக்காளி விலை ரூ.80 வரை விற்றதால், சமை யலில் தக்காளியின் பயன்பாட்டை குறைத்துக்கொண்டேன். தற்போது அதன் விலை ரூ.10 ஆக குறைந்திருப்பதால், இன்று 2 கிலோ வாங்கிச் செல்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT