Published : 10 Jun 2016 08:54 AM
Last Updated : 10 Jun 2016 08:54 AM
ரயில்வே ஊழியர்கள் 42 ஆண்டு களுக்கு பிறகு வரும் ஜூலை 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் பயணி கள் ரயில்சேவை மற்றும் சரக்கு போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையின் கீழ் 17 மண்டலங்களாக பிரிக்கப் பட்டு தினமும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப் படுகின்றன. 14 லட்சம் பேர் இத் துறையில் பணியாற்றுகின்றனர். நாடுமுழுவதும் தினமும் 2.36 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். சுமார் 2.7 மில்லியன் டன் சரக்கு கையாளப்படுகிறது. மக்களின் அன்றாட போக்குவரத்து வசதியில் ரயில் போக்குவரத்து முக்கியமானதாக உள்ளது.
8 மணிநேரம் வேலை, பொதுத் துறைக்கு இணையான ஊதிய உயர்வு, போனஸ், பணிநிரந்தரம் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1974-ம் ஆண்டு நாடுமுழுவதும் ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 21 நாட்கள் நடைபெற்ற இந்த தொடர் போராட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். சுமார் 78 ஆயிரம் ஊழியர்கள் கைதாகினர். இந்த தொடர் போராட்டத்தால் பயணிகள் ரயில்சேவையும், சரக்கு களை கையாள்வதும் முடங்கின.
இந்நிலையில், தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதிய கமிஷனில் உள்ள முரண் பாடுகளை களைய வேண்டும், அடிப் படை ஊதியம் ரூ.26 ஆயிரம் என நிர் ணயிக்க வேண்டும் என்பன உள் ளிட்ட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதே கோரிக்கைகளை வலி யுறுத்தி கடந்த ஏப்ரல் 11-ம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்த வுள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டி ருந்தது. ஆனால் சில மாநிலங் களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்ததால், மத்திய அரசின் கோரிக் கையை ஏற்று தற்காலிகமாக இந்த போராட் டத்தை தொழிற்சங்கங்கள் தள்ளி வைத்திருந்தன.
இந்நிலையில், எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் என்.கண் ணையா, டிஆர்இயூ சங்கத்தின் பொதுசெயலாளர் எ.ஜானகிராமன், எஸ்ஆர்இஎஸ் சங்கத்தின் பொது செயலாளர் சூர்யபிரகாசம் ஆகியோரின் தலைமையில் தனித் தனியாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்துக்கு நேற்று பேரணியாக வந்தனர். பின்னர், தொழிற்சங்கங்களின் மூத்த நிர்வாகிகள் தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோக்ரியிடம் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங் கினர்.
இது தொடர்பாக எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் என்.கண் ணையா ‘தி இந்து’விடம் கூறும் போது, “கடந்த 1974-ம் ஆண்டில் நடத்தப்பட்ட வேலைநிறுத்த போராட்டம் பெரும் பாதிப்பை ஏற் படுத்தியது. இந்த முறை ரயில்வே ஊழியர்களுடன் தபால் துறை, பாது காப்பு, வருமானவரித் துறை உட்பட பல்வேறு துறையினரும் இணைந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் முந்தைய போராட்டத்தை விட பெரும் பாதிப்பு இருக்கும். 7-வது ஊதிய கமிஷனில் மாற்றம் செய் யாதது, புதிய பென்ஷன் திட் டத்தை ரத்து செய்யாதது, 52 வகையான படிகளை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது உள்ளிட்டவைதான் இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது’’ என்றார்.
டிஆர்இயூ சங்கத்தின் செயல் தலைவர் ஆர்.இளங்கோவன் கூறும் போது, “கடந்த 1974-ம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் நாடுமுழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நிலக் கரி கொண்டுசெல்வது தடைப்பட்ட தால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது, உணவு தானியங்கள் ஒரே இடத்தில் முடங்கின. டீசல், பெட்ரோல் விநியோகமும் பாதிக்கப்பட்டது. அப்போது இருந்த மத்திய அரசு மாறுவதற்கே இந்த வேலைநிறுத்த போராட்டம் அடித்தளமாக இருந் தது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT