Last Updated : 08 Apr, 2017 09:45 AM

 

Published : 08 Apr 2017 09:45 AM
Last Updated : 08 Apr 2017 09:45 AM

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் குறைந்த விலையில் விற்பனை: 60 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி

ஜிப்மர் மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகளைக் குறைந்த விலையில் வழங்கும் வகையில் திறக்கப்பட்டுள்ள ‘அம்ரித் மருந்தகம்’ மக்களிடையே நல்ல வர வேற்பைப் பெற்றுள்ளது. இங்கு புற்று நோய், இதய நோய், நீரிழிவு நோய்க்கான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. கடந்த 10 மாதங்களில் 25 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு உள்ளூர் மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிகிச்சைக்காக வருகின் றனர். இங்கு சிகிச்சை வரும் பல ரும் குறைந்த வருவாய் உடையவர் கள்.

புற்று நோய், இதய நோய் போன்ற நோய்களுக்கான மருந்துகளின் விலை கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இத னால், பலரால் மருந்துகளை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள் ளது. இந்நிலையில், உயிர் காக்கும் மருந்துகளைக் குறைந்த விலையில் வழங்கும் வகையில் ‘அம்ரித் மருந் தகம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. கடந்த ஆண்டு மே மாதம் புதுச்சேரி ஜிப்மர் மருத் துவமனையில் ‘அம்ரித் மருந்தகம்’ திறக்கப்பட்டது. இந்த மருந்தகத் துக்கு நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது.

இதுதொடர்பாக ஜிப்மர் இயக்கு நர் சுபாஷ் சந்திர பரிஜா கூறும் போது, “புற்றுநோய், இதய நோய் போன்ற நோய்களுக்கான மருந்துகளின் விலை அதிகமாக உள்ளது. வெளியில் மருந்தகங் களில் விற்கப்படும் விலையை விட ஜிப்மரில் உள்ள அம்ரித் மருந்துகள் 60 முதல் 80 சதவீத தள்ளுபடி விலை யில் விற்கப்படுகின்றன” என்றார்.

மருத்துவ கண்காணிப்பாளர் பாலசந்தர் கூறும்போது, “ஜிப்மரில் உள்ள அம்ரித் மருந்தகத்தில் தள்ளுபடி விலையில் விற்கப்படும் மருந்துகளை ஜிப்மரில் சிகிச்சை பெறுவோர் மட்டுமின்றி பிற மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரும் வாங்கி பயன்பெற லாம். இதற்கு மருத்துவரின் மருந்து பரிந்துரை சீட்டு அவசியம்” என்றார்.

மருந்தக பொறுப்பாளர் பிரதீப் கூறும்போது, “ஜிப்மரில் உள்ள அம்ரித் மருந்தகத்தில் கடந்த 10 மாதங்களில் நான்கரை கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் ரூ.2 கோடியே 30 ரூபாய்க்கு விற்கப் பட்டுள்ளன. புற்று நோயாளிகளுக்கு தேவையான ஒரு மருந்தின் விலை 11 ஆயிரம் ரூபாய்க்கு வெளியே விற்கப்படுகிறது. அம்ரித் மூலம் 1,034 ரூபாய்க்கு தரப்படுகிறது. பல உயர் சிகிச்சை மருந்துகள் விலை இங்கு மிகவும் குறைவு" என்றார்.

ஏழை மக்களுக்கு பயனளிக்கும் இந்த மருந்துகளை, உண்மையான பயனாளிகளுக்கு சென்று சேரும் வகையில் தீர விசாரித்து, அவர் கள் கொண்டுவரும் மருந்து சீட்டு கள் உண்மையானதா என பார்த்தும், பரிந்துரை செய்துள்ள டாக்டர்களிடம் தொலைபேசியில் ஊர்ஜிதம் செய்தும் குறைவான விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த மருந்து களை வாங்கி வெளியில் விற்க முடியாத வகையில் மருந்து உறை களிலும், மருந்து சீட்டுகளிலும் முத் திரை பதிக்கப்படுவதாக மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x